Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியின் 23வது "இளவரசர்" ஆனார் ரஹானே!

ஹராரே: இந்திய கிரிக்கெட் அணியின் 23வது கேப்டனாக இன்று அஜிங்கியா ரஹானே பொறுப்பேற்றுள்ளார்.

ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணியின் கேப்டனாக அஜிங்கியா ரஹானே பொறுப்பு வகிக்கிறார். இன்று கேப்டனாக முதல் போட்டியில் அவர் மோதி வருகிறார்.

இந்திய ஒரு நாள் அணியிந் 23வது கேப்டன் ரஹானே என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் போட்டியிலேயே டாஸ் போச்சு

முதல் போட்டியிலேயே டாஸ் போச்சு

இன்றைய முதல் போட்டியில் ரஹானே டாஸை இழந்தார். இருப்பினும் இந்திய அணி வெல்லும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

முதல் கேப்டன் வடேகர்

முதல் கேப்டன் வடேகர்

இந்திய ஒரு நாள் அணியின் முதல் கேப்டன் என்ற பெருமைக்குரியவர் அஜீத் வடேகர். அவரும் மும்பைக்காரர்தான். ரஹானேவும் மும்பைதான்.

அதிக போட்டிகளுக்குக் கேப்டன் டோணி

அதிக போட்டிகளுக்குக் கேப்டன் டோணி

டோணிதான் அதிக அளவிலான ஒரு நாள் போட்டிகளுக்குக் கேப்டனாக இருந்தவர். அதாவது 181 ஒரு நாள் போட்டிகளுக்கு அவர் கேப்டனாக இருந்துள்ளார். அதில் 101 போட்டிகளுக்கு அவர் வெற்றித் தேடித் தந்து்ளார்.

22 கேப்டன்கள்

22 கேப்டன்கள்

இதற்கு முன்பு 22 கேப்டன்களை இந்திய அணி கண்டுள்ளது. அவர்கள் அஜீத் வடேகர் (2 போட்டி), வெங்கட்ராகவன் (7), பிஷன் சிங் பேடி (4) கவாஸ்கர் (37).

கபில்தேவ்

கபில்தேவ்

விஸ்வநாத் (1), கபில்தேவ் (74). கிர்மானி (1), அமர்நாத் (1), ரவி சாஸ்திரி (11), திலீப் வெங்சர்க்கர் (18), ஸ்ரீகாந்த் (13).

அஸாருதீன்

அஸாருதீன்

அஸாருதீன் 174 போட்டிகளுக்குக் கேப்டனாக இருந்தவர். டோணிக்கு அடுத்து அவர்தான் அதிக போட்டிகளுக்குக் கேப்டனாக இருந்தவர். டோணி, கங்குலிக்கு முன்பு வெற்றிகரமான கேப்டனாகவும் அவர்தான் இருந்தார்.

சச்சின்

சச்சின்

சச்சின் டெண்டுல்கர் 73 போட்டிகளுக்குக் கேப்டனாக இருந்தார். ஆனால் வெற்றி சதவீதம் மிக மிக குறைவு. ஜடேஜா (13), கங்குலி 146), டிராவிட் (79), கும்ப்ளே (1), ஷேவாக் (12).

டோணி

டோணி

கேப்டன் டோணி 181 போட்டிகளுக்குக் கேப்டனாக இருந்துள்ளார். ரெய்னா 12, கம்பீர் (6), கோஹ்லி (17),, ரஹானே (1) ஆகியோர் பிற கேப்டன்கள் ஆவர்.

Story first published: Friday, July 10, 2015, 15:14 [IST]
Other articles published on Jul 10, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+