“டிராவிட்டை மீறி ரகானேவுக்கு துரோகம்”.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. கொந்தளிக்கும் ரசிகர்கள்!
தென்னாப்பிரிக்கா: இந்திய அணியில் விராட் கோலி, டிராவிட் ஆகியோர் இருந்தும் ரகானேவுக்கு துரோகம் நடந்திருப்பதாக ரசிகர்கள் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.
இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது.
ஓமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெறவிருப்பதால் ரசிகர்களின் கவனத்தை இந்த தொடர் ஈர்த்துள்ளது.

டெஸ்ட் தொடர்
இந்த சுற்றுப்பயணத்திற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி மட்டும் கடந்த 16ம் தேதியன்று ஜோசன்பர்க்கிற்கு சென்றடைந்தது. இதுவரை தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதன் மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை கூட இந்திய அணி வென்றதில்லை. எனவே அணி வீரர்களை மிகவும் கவனத்தோடு தேர்வு செய்து அனுப்பியுள்ளனர்.

டிராவிட் வாக்குவாதம்
இந்த அணியில் சீனியர் வீரர்களான ரகானே மற்றும் புஜாரா ஆகியோருக்கு இடம் கொடுக்க கூடாது என்ற முடிவில் தேர்வுக்குழு இருந்தனர். ஆனால் அவர்கள் கண்டிப்பாக தேவை என விராட் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் வாக்குவாதம் செய்ய, இறுதியில் அவர்களுக்கான கடைசி வாய்ப்பாக இந்த தொடர் கொடுக்கப்பட்டது. எனினும் ரகானேவின் துணைக்கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ரோகித்திடம் கொடுக்கப்பட்டது.

அநீதி
இந்நிலையில் டிராவிட், கோலி ஆகியோரை மீறி ரகானேவுக்கு துரோகம் நடந்துள்ளது. துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோகித் சர்மா, காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து விலகிவிட்டார். அப்படி என்றால் அடுத்த துணைக்கேப்டனாக ரகானே மீண்டும் கொண்டு வரப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் அயல்நாடுகளில் ரகானேவின் அனுபவம் அதிகம். ஆனால் அப்படி நடக்கவில்லை. அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video

என்ன காரணம்
ரகானே துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டால், அவருக்கு நிச்சயம் ப்ளேயிங் 11ல் இடம் கொடுத்தே ஆக வேண்டும். ஆனால் அவரின் ஃபார்ம் மோசமாக இருப்பதால், ப்ளேயிங் 11ல் ஒதுக்கப்படுவார் போல தெரிகிறது. இதன் காரணமாக தான் கே.எல்.ராகுலை துணைக்கேப்டனாக நியமித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications