Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னை விமர்சித்தால், கிரிக்கெட் தெரியாது என்று அர்த்தம்..! கோலி மீது மறைமுக தாக்கு.. ரஹானே ஓபன் டாக்

மும்பை: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரஹானே, தன் மீது எழுந்த விமர்சனத்துக்கு பதிலடி தருவதாக நினைத்து ரசிகர்களிடம் வசமாக சிக்கி கொண்டார்.

ரஹானே தொடர்ந்து சொதப்பி வருவதால், இந்திய அணியில் அவரது இடம் கேள்விக்குறியாகி விட்டது.

பலரும் ரஹானேவை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்றும், ரஹானேவின் கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவு தான் என்றும் கூறி வந்தனர்.

ரஹானே ஃபார்ம்

ரஹானே ஃபார்ம்

அதற்கு காரணம், ரஹானே கடைசியாக சதம் அடித்தது டிசம்பர் 2020ஆம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற டெஸ்டில் தான். ரஹானே கடந்த 27 இன்னிங்சில் 547 ரன்களே அடித்துள்ளார்.. இதில் சராசரியாக அவர் 20 ரன்கள் மட்டுமே அடித்தார். இதில் 3 அரைசதம் மட்டுமே அடங்கும்.இந்த கால கட்டத்தில் ரஹானேவின் ஒட்டுமொத்த சராசரி 43 இல் இருந்து 39ஆக குறைந்தது. ரஹானே தற்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு ரஞ்சி கோப்பையில் மும்பை அணிக்காக பிரித்வி ஷா தலைமையில் விளையாட உள்ளார்.

பதிலடி

பதிலடி

இதனிடையே, விமர்சனங்களுக்கு பதிலடி தந்துள்ள ரஹானே, என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக சிலர் கூறும் போது, வெறும் புன்னகையுடன் கடந்து விடுகிறேன்.கிரிக்கெட்டை பற்றி தெரிந்தவர்கள் அப்படி யாரும் பேச மாட்டார்கள். ஆஸ்திரேலியாவில் நான் எப்படி விளையாடினேன். என் பங்களிப்பு என்ன என்பது ரசிகர்களுக்கு நன்றாக தெரியும்.

மறைமுக விமர்சனம்

மறைமுக விமர்சனம்

கிரிக்கெட்டை விரும்பும் ரசிகர்கள் அறிவுப்பூர்வமாக பேசுவார்கள் . ரோகித் சர்மா நல்ல கேப்டனாக இருப்பார்.வீரர்களுக்கு ஆதரவு அளிப்பார். வீரர்கள் ரன்னே அடிக்கவில்லை என்றாலும் அவருக்கு வாய்ப்பு வழங்கி நம்பிக்கை தருவார். இது வீரர்கள் சிறப்பாக செயல்பட உதவும் என்றும் கூறினார். அப்போது விராட் கோலி இதை எல்லாம் செய்யவில்லை என்பது போல் மறைமுகமாக ரஹானே தாக்கியுள்ளார்.

ரசிகர்கள் பதிலடி

ரசிகர்கள் பதிலடி

இதனிடையே, ரஹானேவின் இந்த பேட்டி ரசிகர்களிடையே கடும் விமர்சனத்தை பெற்றுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக சரியாக விளையாடவில்லை என்று கூறினால், ரசிகர்களையே தாக்கும் விதமாக இயலாமையில் ரஹானே பேசுவதாக ரசிகர்கள் அவரை கிண்டலடித்து வருகின்றனர். கோலியையும் மறைமுகமாக தாக்கியதால், கோலி ரசிகர்களும் தற்போது களத்தில் குதித்துவிட்டனர்.

Story first published: Thursday, February 10, 2022, 18:16 [IST]
Other articles published on Feb 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+