Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ஒரு டெஸ்ட் அணியில் 8 சீனியர் வீரர்கள் இருக்கணும் ஆனால் இந்திய அணியில்..”.. கம்பீரை விளாசிய ரஹானே

மும்பை: இந்திய டெஸ்ட் அணி சமீபகாலமாக அதிக தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் அதுபற்றி அஜின்கியா ரஹானே வெளிப்படையாக விமர்சித்து இருக்கிறார். தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழுவினர் மூத்த வீரர்களை மதிக்காதது குறித்து அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

இந்திய டெஸ்ட் அணி கடந்த 2025ல் நியூசிலாந்திற்கு எதிராக 0-3 என்ற கணக்கிலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 0-2 என்ற கணக்கிலும் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர்களை இழந்து அதிர்ச்சியளித்தது. ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின், புஜாரா போன்ற மூத்த வீரர்கள் குறுகிய காலத்தில் அடுத்தடுத்து ஓய்வு பெற்றதே இதற்கு முக்கிய காரணம் என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

Ajinkya Rahane says a test team need 8 senior players but Indian team has none

இதுகுறித்து ஒரு போட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய ரஹானே, "டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு இன்னும் 7 முதல் 8 மூத்த வீரர்களின் அனுபவமும், 2 அல்லது 3 இளம் வீரர்களின் துடிப்பும் தேவை என்று நான் நினைக்கிறேன். ஆனால் இப்போது இந்திய அணியில் கிட்டத்தட்ட அனைத்து வீரர்களும் புதியவர்களாக உள்ளனர். அனுபவமிக்க மூத்த வீரர்கள் யாருமே அணியில் இல்லை. டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு இது நல்லதல்ல" என்று கூறினார்.

பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழுவினரை சூசகமாகச் சுட்டிக்காட்டிய ரஹானே, "டெஸ்ட் கிரிக்கெட் அழியாமல் இருக்க நாம் அனைவரும் விரும்புகிறோம். கடந்த 2-3 ஆண்டுகளில் நான் கவனித்தவரை, மூத்த வீரர்களைத் தக்கவைத்து அவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். இந்திய அணியில் அனைத்து மூத்த வீரர்களும் ஒரே நேரத்தில் அணியை விட்டு வெளியேறியது தான் தற்போதைய பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது" என்றார்.

ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டிலும் அதிக ரன் குவித்த வீரர்.. உலக சாதனை படைத்த இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர்

ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டிலும் அதிக ரன் குவித்த வீரர்.. உலக சாதனை படைத்த இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர்

மேலும், டெஸ்ட் போட்டியின் சவால்கள் குறித்துப் பேசிய அவர், "கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் வீட்டில் அமர்ந்து இந்திய அணி சொந்த மண்ணிலேயே போட்டிகளைத் தோற்பதைப் பார்த்து வருகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு மன வலிமையும், சவாலான சூழலை எதிர்கொள்ளும் திறனும் மிகவும் முக்கியம். கடினமான செஷன்களை (session) பொறுமையாகக் கடந்து விளையாட வேண்டும். நான் எந்த அணியின் பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை, தற்போதைய அணிகளில் அந்தப் பொறுமை இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

WTC புள்ளிப்பட்டியல்.. கடைசி இடத்தில் இருந்து முன்னேறிய பாகிஸ்தான்.. இந்தியா எந்த இடம்?

Also Read

WTC புள்ளிப்பட்டியல்.. கடைசி இடத்தில் இருந்து முன்னேறிய பாகிஸ்தான்.. இந்தியா எந்த இடம்?
Story first published: Thursday, August 6, 2026, 10:18 [IST]
Other articles published on Aug 6, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+