Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட் சாம்பியன்ஷிப் குறித்து திங் பண்ணல... எங்க போகஸ் முழுவதும் இங்கி. தொடர்தான்... ரஹானே பளிச்!

சென்னை: இந்திய அணியின் இப்போதேய முழு கவனமும் இங்கிலாந்து தொடரில்தான் உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி குறித்து பின்னர் சிந்தித்து கொள்ளலாம் என்று ரஹானே தெரிவித்தார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முதல் ஆளாக நியூசிலாந்து தகுதி பெற்றது.

இங்கிலாந்துக்கு எதிரான 4 டெஸ்டில், 2 போட்டிகளில் ஜெயித்தாலே, முதலிடத்துடன் கெத்தாக இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு சென்று விடும்.

ஐ.சி.சி எடுத்த அஸ்திவாரம்

ஐ.சி.சி எடுத்த அஸ்திவாரம்

கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகள், டி20 போட்டிகள் ரசிகர்களை தொடர்ந்து கட்டிப்போட, டெஸ்ட் போட்டிகளை பார்க்க ரசிகர்கள் தயாராக இல்லை. இவ்வாறு தயக்கம் காட்டி வரும் ரசிகர்களை டெஸ்ட் போட்டி பக்கம் திரும்பும் வகையில் ஐ.சி.சி. கையில் எடுத்த ஒரு அஸ்திவாரம்தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பையும் சிதைத்தது

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பையும் சிதைத்தது

டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின்படி இதில் பங்கேற்கும் அணிகள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தொடரில் பங்கேற்க வேண்டும். முதல் இரண்டு பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் முன்னேறி கோப்பையை கைப்பற்றும். ஆனால் இந்த கொரோனா இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்பையும் சிதைத்து விட்டது. இதனால் பல தொடர்கள் ரத்தாயின.

இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து தகுதி

இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து தகுதி

தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் அச்சறுறுத்தி வருவதால் தென் ஆப்பிரிக்கா தொடரை ரத்து செய்வதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அதிரடியாக அறிவித்தது நியூசிலாந்துக்கு பெரிய அதிர்ஷ்டமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முதல் ஆளாக நியூசிலாந்து தகுதி பெற்றது. இந்த இறுதிப்போட்டியில் விளையாட இந்திய பக்கமும் காற்று வீசுகிறது.

இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறுமா?

இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறுமா?

இங்கிலாந்துக்கு எதிரான 4 டெஸ்டில், 2 போட்டிகளில் ஜெயித்தாலே, முதலிடத்துடன் கெத்தாக இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு சென்று விடும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் மாதம் இங்கிலாந்தின் புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி குறித்து கவனம் செலுத்துவீர்களா என்று இந்திய டெஸ்ட் துணை கேப்டன் ரஹானேவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இப்போதைய கவனம் இங்கிலாந்து தொடர்தான்

இப்போதைய கவனம் இங்கிலாந்து தொடர்தான்

அதற்கு அவர் அளித்த பதில் இதோ:- இந்திய அணியின் இப்போதேய முழு கவனமும் இங்கிலாந்து தொடரில்தான் உள்ளது. 3-4 மாதங்கள் கழித்து நடைபெறம் உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி குறித்து பின்னர் சிந்தித்து கொள்ளலாம். கடந்த 2 ஆண்டுகளில் நியூசிலாந்து உள்நாட்டில் நல்ல கிரிக்கெட்டில் விளையாடியுள்ளது. எனவே நியூசிலாந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் முன்னேற தகுதியான அணிதான் என்றார்.

Story first published: Friday, February 5, 2021, 8:27 [IST]
Other articles published on Feb 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+