அடுக்கடுக்கான விமர்சனங்கள்...மோசமான புள்ளி விவரங்கள்...2வது டெஸ்டில் என்ன செய்ய போகிறார் ரஹானே?
சென்னை : முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி சரணடைந்ததையடுத்து அணியில் நிலவும் அரசியல் பற்றிய கருத்துக்கள் ஆங்காங்கே எழுந்து வருகின்றன.
இந்நிலையில் மெல்போர்னில் சதமடித்து அசத்திய துணை கேப்டன் ரகானே சிறப்பான ஆட்டத்தை சென்னை டெஸ்டில் சிறப்பான பங்களிப்பை அளிக்க தவறியுள்ளதாக சமூக வலைதளங்களில் பேச்சுகள் எழத்தொடங்கியுள்ளன.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை இந்தியா பெற்றுள்ளது. இந்த இரு இன்னிங்சிலும் துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானே 1 மற்றும் 0 ரன்களை மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார். இதற்கு கோலி கேப்டன்சியில் ரஹானே ஒத்துழைக்க மறுக்கிறார் என்றெல்லாம் கூறப்படுகிறது.

கோலி விளக்கம்
ரஹானே மீதான விமர்சனம் குறித்து பேசிய கோலி, எதையாவது தோண்டி எடுத்து இல்லாததையும் பொல்லாததையும் கூற வேண்டாம், ஏனெனில் உங்களுக்கு ஒன்றுமே கிடைக்காது. புஜாரா, ரஹானே அணியின் மிக முக்கியமான வீரர்கள் என்றும் தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணியில் இவர்களுக்கு முக்கியப் பங்கு இருந்தே தீரும் என்றும் தெரிவித்துள்ளார்.

க்ளாஸ் ப்ளேயர்
ராஹானேவின் ஆட்டம் குறித்து பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர், கேப்டனாக இல்லாமல் ஒரு பேட்ஸ்மேனாக ரஹானேவை நான் பார்க்கும்போது, அவர் மெல்போர்ன் டெஸ்டில் சதம் அடித்த பிறகு 27 (நாட் அவுட்), 22, 4, 37, 24, 1 மற்றும் 0 ஆகிய ரன்களை எடுத்துள்ளார். சதம் அடித்த பிறகு க்ளாஸ் ப்ளேயர்கள் அந்த ஃபார்மிலேயே உள்ளார்கள், சிலர் அந்த பார்மில் இருப்பதில்லை என்று கூறியுள்ளார்.

ரஹானேவின் சொதப்பல்
சொந்த மண்ணில் ரஹானே சரிவர ஆடவில்லை என்பதையே புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. கடந்த 2017ம் ஆண்டு முதல் சொந்த மண்ணில் 25 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ரஹானே 810 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இது தற்போது அணியில் சேர்க்கபடாமல் உள்ள விருத்திமான் சாஹா மற்றும் கே.எல்.ராகுலை விட குறைவாகும்.

நிலைநிறுத்திக்கொள்வாரா?
இங்கிலாந்து - இந்தியா மோதும் 2வது டெஸ்ட் போட்டியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்தான் நடைபெறவுள்ளது. வரும் 13ம் தேதி தொடங்கும் இந்த போட்டியில் துணை கேப்டனாக பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய சூழலுக்கு ரஹானே தள்ளப்பட்டுள்ளார். ரசிகர்களும் அவரின் அட்டத்தை காண எதிர்நோக்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications