For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நான் இல்லைன்னாலும் சிறப்பா செயல்படுவாரு... துணை கேப்டன் பத்தி இப்படி சொல்லியிருக்காரு கோலி

அடிலெய்ட் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பகலிரவு போட்டி நாளை அடிலெய்டில் துவங்கவுள்ளது.

முதல் போட்டியில் மட்டும் பங்கேற்கும் கேப்டன் விராட் கோலி, தன்னுடைய குழந்தை பிறப்பையொட்டி அடுத்த 3 போட்டிகளில் பங்கேற்காமல் நாடு திரும்பவுள்ளார். இதையடுத்து ரஹானே கேப்டனாக செயல்பட உள்ளார்.

இந்நிலையில் தான் இல்லையென்றாலும் அஜிங்க்யா ரஹானே சிறப்பாக செயல்படுவார் என்று கேப்டன் விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாளை துவக்கம்

நாளை துவக்கம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நாளை துவங்கவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார் கேப்டன் விராட் கோலி. அதையடுத்து அவர் தனது முதல் குழந்தை பிறப்பையொட்டி நாடு திரும்புகிறார். வரும் ஜனவரியில் அவர் தனது குழந்தையை எதிர்பார்ப்பதாக முன்னதாக அறிவித்திருந்தார்.

விராட் இல்லாத டெஸ்ட் போட்டிகள்

விராட் இல்லாத டெஸ்ட் போட்டிகள்

பகலிரவு போட்டியை விளையாடவுள்ள கோலி அதையடுத்து திட்டமிடப்பட்டுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார். அவர் இல்லாத இந்த போட்டிகளை துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானே தலைமையேற்று நடத்தவுள்ளார். கோலி இல்லாத இந்திய அணி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

கோலி பாராட்டு

கோலி பாராட்டு

இந்நிலையில் தான் இல்லையென்றாலும் அணியை ரஹானே சிறப்பாக வழிநடத்துவார் என்று கேப்டன் விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசிய வீடியோ, பிசிசிஐயின் டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் தங்கள் இருவருக்குள்ளும் சிறப்பான புரிதல் உள்ளதாகவும் பல தருணங்களில் பார்ட்னர்ஷிப் அமைத்து செயல்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ரஹானேவிற்கு தெரியும்

ரஹானேவிற்கு தெரியும்

கடந்த இரண்டு பயிற்சி ஆட்டங்களில் ரஹானே சிறப்பாக செய்லபட்டதை சுட்டிக் காட்டியுள்ள கோலி, இந்திய அணியின் வலிமை குறித்து அவருக்கு நன்றாக தெரியும் என்றும் பாராட்டியுள்ளார். மேலும் ஒருவரை மட்டுமே நம்பி அணி இல்லை என்றும் குழுவாக செயல்பட்டே வெற்றிகளை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வெற்றி பெறுவதே திட்டம்

வெற்றி பெறுவதே திட்டம்

தாங்கள் இருவரும் ஒரே நிலையில் இருப்பதாகவும் தான் இல்லாத அணியை ரஹானே தன்னுடைய தனிப்பட்ட திறன் மற்றும் கேப்டன்ஷிப்பில் சிறப்பாக வழிநடத்துவார் என்றும் விராட் கூறியுள்ளார். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறுவதை மட்டுமே ஐடியாவாக கொண்டு செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Wednesday, December 16, 2020, 16:30 [IST]
Other articles published on Dec 16, 2020
English summary
I am confident Ajinkya will do a tremendous job -Kohli
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+