Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிசிசிஐயில் மீண்டும் தலை தூக்குகிறதா மும்பை லாபி? அஜித் அகார்கருக்காக மாற்றப்பட்ட பிசிசிஐ நெறிமுறை

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வுக்குழு உறுப்பினராக அஜித் அகார்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் மும்பை லாபியின் ஆதிக்கம் மீண்டும் இந்திய கிரிக்கெட் அணிக்குள் வந்துவிட்டதா என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

இதற்கு காரணம் தேர்வு குழுவில் எப்போதும் ஒவ்வொரு பிராந்தியத்திலிருந்து ஒவ்வொரு உறுப்பினர் தேர்வு செய்யப்படுவார்கள். உதாரணத்திற்கு தெற்கு பிராந்தியத்தில் இருந்து வந்திருக்கும் நபர் தென்னிந்திய அணிகளின் போட்டியை பார்த்து வீரர்களை தேர்வு செய்வார்.

Ajit Agarkar appointment makes way for Mumbai Domination in BCCI

இந்த நிலையில் வடக்கு பிராந்தியத்தில் இருந்த சேத்தன் சர்மா ராஜினாமா செய்ததால் அந்த பதவிக்கு வடக்கு பிராந்தியத்தில் இருக்கும் நபர் தான் அணிக்குள் வரவேண்டும். ஆனால் இம்முறை மேற்கு பிராந்தியத்தை சேர்ந்த அஜீத் அகார்கர் தேர்வு குழு தலைவராக வந்திருக்கிறார். இதன் மூலம் தேர்வுக்குழுவில் இரண்டு மேற்கு பிராந்தியத்தை சேர்ந்த நபர்கள் இருக்கிறார்கள்.

இது பிசிசிஐ கடைபிடிக்கும் நெறிமுறைகளுக்கு எதிரானது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மேற்கு பிராந்தியத்தில் இருந்து பெரிய நட்சத்திரங்கள் யாரும் விண்ணப்பிக்காததால் தான் அஜித் அகார்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட்டின் பவர் ஹவுஸ் ஆக எப்போதுமே மும்பை தான் விளங்கும்.

ஆனால் சீனிவாசன், ஜெய்ஷா, கங்குலி போன்றோரின் வருகையால் மும்பை தன்னுடைய முக்கியத்துவத்தை இழந்தது. இந்த நிலையில் மீண்டும் தேர்வு குழு தலைவர் என்ற முக்கிய பொறுப்பு மும்பையைச் சேர்ந்த அஜித் அகார்கருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மும்பையைச் சேர்ந்த வீரர்கள் அதிக அளவில் அணியில் இடம் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது.இதனால்தான் பிசிசிஐயில் நடைமுறைகளை மீறி மும்பையைச் சேர்ந்த அஜித் அகார்கர் உள்ளே வந்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இதன் மூலம் மும்பை லாபி மீண்டும் பிசிசிஐயில் ஆதிக்கம் செலுத்தும் என்றும் கூறப்படுகிறது. ஒரு காலத்தில் சச்சின்,வசீம் ஜாஃபர், ஜாகீர் கான் என மும்பை வீரர்கள் அணியில் இடம் பெற்றார்களோ அதே போல் தற்போது அஜித் அகார்கரின் பதவி காலத்தில் மும்பை வீரர்களின் ஆதிக்கம் தலை தூக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மாவின் கேப்டன் பதவிக்கு ஆபத்து இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அஜித் அகார்கர் உள்ளே வந்திருப்பதால் அவரும் காப்பாற்றப்பட்டு இருக்கிறார்.

Story first published: Wednesday, July 5, 2023, 11:35 [IST]
Other articles published on Jul 5, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+