Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அவசர முடிவு ஏன் எடுக்குறீங்க..” கபில் தேவ்-ஐ நோஸ் கட் செய்த சீனியர்.. காரணம் விராட் கோலி தான்!!

மும்பை: இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவானாக பார்க்கப்படும் கபில் தேவ்-ஐ முன்னாள் வீரர் அஜித் அகர்கர் நோஸ் கட் செய்துள்ளார்.

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

ஃபார்ம் அவுட்டில் இருக்கும் விராட் கோலிக்கு இந்த தொடரில் இருந்து ஓய்வு தரப்பட்டது தான் பேசுப்பொருளாக மாறியது.

கபில் தேவ்-ன் பேச்சு

கபில் தேவ்-ன் பேச்சு

குறிப்பாக விராட் கோலி குறித்து முன்னாள் வீரர் கபில் தேவ் கூறிய வார்த்தைகள் ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தது. அதில் அவர், உலகின் நம்.2 டெஸ்ட் பவுலர் ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இருந்து நீக்கப்படும் போது, உலகின் நம்பர் 1 வீரர் விராட் கோலி ஃபார்ம் அவுட்டானால் ஏன் நீக்கப்பட கூடாது. அவரை அணியில் இருந்து நீக்கலாம் என கூறியது சர்ச்சையை கிளப்பியது.

அகர்க்கரின் கருத்து

அகர்க்கரின் கருத்து

கபில் தேவ்-ன் இந்த கருத்துக்கு மாறாக அஜித் அகர்க்கர் கூறியுள்ளார். ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையில் மோசமான ஃபார்மை சந்திப்பது சகஜம் தான். அனைத்து முன்னணி வீரர்களுக்கும் இது நடக்கும். அடுத்தாண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெறுகிறது. கோலி மட்டும் ஃபார்முக்கு திரும்பிவிட்டால், சிறப்பாக இருந்துவிடும்.

அவசர முடிவுகள்

அவசர முடிவுகள்

விராட் கோலி தனது பழைய ஃபார்மில் இல்லை என்பது தான் தற்போது பெரிய பிரச்சினையாக உள்ளது. எனினும் அவர் ஃபார்முக்கு திரும்ப தொடங்கிவிட்டார். சிறப்பான தொடக்கம் கிடைத்துவிட்டது. எனவே விராட் கோலியை நீக்க வேண்டும் என்ற சிலர் கூறுவது அவசரப்பட்டு முடிவெடுக்கிறார்கள் என்று தான் கூறுவேன் என அகர்க்கர் தெரிவித்துள்ளார்.

பாண்டிங்கின் விளக்கம்

பாண்டிங்கின் விளக்கம்

இதனிடையே ஆஸ்திரேலிய வீரர் ரிக்கிப்பாண்டிங்கும் இதே போன்ற கருத்தை தான் கூறியிருந்தார். அதில், விராட் கோலிக்கு கடினமாக காலமாக இது உள்ளது. அவரை நீக்கிவிட்டு, மற்றொரு வீரரை உலகக்கோப்பைக்கு கொண்டு வந்தால், அவர் சிறப்பாக விளையாடலாம் தான். ஆனால் அதன்பின் கோலி கம்பேக் கொடுப்பது கடினமாகிவிடும். எனவே கோலிக்கு தொடர்ந்து வாய்ப்பு தர வேண்டும் என பாண்டிங் கூறியுள்ளார்.

Story first published: Saturday, July 23, 2022, 19:38 [IST]
Other articles published on Jul 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+