For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னாச்சு..? மும்பை கிரிக்கெட் அணி தேர்வுக்குழு ஒட்டுமொத்தமாக ராஜினாமா

மும்பை:மும்பை கிரிக்கெட் அணியின் மூத்த தேர்வுக்குழுவினர் அனைவரும் ராஜினாமா செய்துள்ளது, கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை கிரிக்கெட் அணியானது அண்மைக்காலமாக மிக மோசமாக விளையாடி வருகிறது. ரஞ்சி கோப்பை, விஜய் ஹசாரே, சையத் முஷ்டாக் அலி போட்டி என தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது.

Ajit agarkar and others resign as mumbai selectors

மும்பை அணியின் இந்த மோசமான பார்ம், ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும்... அணி நிர்வாகத்தின் மீதும் பல கேள்விகளை முன் வைத்தது.

தினேஷ் கார்த்திக், ராகுலுக்கு இடமில்லை.. என்ன அனில் கும்ப்ளே இப்படி பண்ணிட்டாரு! தினேஷ் கார்த்திக், ராகுலுக்கு இடமில்லை.. என்ன அனில் கும்ப்ளே இப்படி பண்ணிட்டாரு!

இந் நிலையில்... தேர்வுக்குழுவில் இருந்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் விலகி விட்டார். முன்னாள் வீரர்கள் நிலேஷ் குல்கர்னி, சுனில் மோரே மற்றும் ரவி தக்கர் ஆகியோரும் ராஜினாமா செய்துள்ளனர்.

மும்பை கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகக்குழு மீட்டிங்கிற்கு முன்பு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். தேர்வுக்குழுவினர் அழுத்தத்தில் இருப்பதாக தெரிகிறது.

மேலும், கிரிக்கெட் சங்க உறுப்பினர்கள் அவர்களை நீக்கும் நோக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. சையது முஷ்டாக் அலி டி20 கோப்பைக்கு பிறகு இவர்கள் ராஜினாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, March 16, 2019, 18:37 [IST]
Other articles published on Mar 16, 2019
English summary
Former senior cricketer Ajit Agarkar has resigned as chairman of the Mumbai Cricket Association senior selection committee. Three more in the selection committee along with Agarkar resigned from their post.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X