Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடடே... நாமெல்லாம் மறந்து போன அஜீத் அகர்கரும் ரிட்டயர் ஆகிறாராம்...!

மும்பை: கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவோர் பட்டியலில் அஜீத் அகர்கரும் இடம் பெறுகிறார்.

இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு காலத்தில் பிசியாக இருந்த மும்பைக்கார பந்து வீச்சாளர் அகர்கர்.

ஆனால் இவரது முகம் ரசிகர்களுக்கு மறந்து போய் பல வருடமாகி விட்ட நிலையில் தற்போது தனது ஓய்வை அறிவித்துள்ளார் அகர்கர்.

மும்பை பந்து வீச்சாளர்

மும்பை பந்து வீச்சாளர்

மும்பையைச் சேர்ந்தவர் அகர்கர். வேகப் பந்து வீச்சாளர்.

98ல் அறிமுகம்

98ல் அறிமுகம்

1998ம் ஆண்டு, அதாவது சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் ஆட வந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழிந்த நிலையில் அணிக்குள் நுழைந்தவர் அகர்கர்.

ஒரு நாள் போட்டி மூலம்

ஒரு நாள் போட்டி மூலம்

அகர்கர் முதலில் ஒரு நாள் போட்டியி்ல்தான் அறிமுகமானார். 98ல் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி அது.

191 ஒரு நாள் போட்டிகள்

191 ஒரு நாள் போட்டிகள்

இதுவரை மொத்தம் 191 ஒரு நாள் போட்டிகளில் அகர்கர் ஆடியுள்ளார்.

டெஸ்ட் 26

டெஸ்ட் 26

அதேசமயம், மிகக் குறைந்த அளவிலான டெஸ்ட் போட்டிகளில்தான் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதாவது 26 டெஸ்ட்டுகளில்தான் ஆடியுள்ளார்.

4 டுவென்டி 20 போட்டிகள்

4 டுவென்டி 20 போட்டிகள்

நான்கு டுவென்டி 20 போட்டிகளிலும் இவர் ஆடியுள்ளார்.

ஒரு நாள் போட்டிகளில் 288 விக்கெட்கள்

ஒரு நாள் போட்டிகளில் 288 விக்கெட்கள்

ஒரு நாள் போட்டிகளில் 288 விக்கெட்களையும், டெஸ்ட் போட்டிகளில் 58 விக்கெட்களையும் இவர் சாய்த்துள்ளார்.

மும்பை சாம்பியனானபோது இவர்தான் கேப்டன்

மும்பை சாம்பியனானபோது இவர்தான் கேப்டன்

2012-13ம் ஆண்டுக்கான ரஞ்சிப் போட்டியில் இவரது தலைமையில்தான் மும்பை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இளம் வீரர்களுக்கு வழி விடுகிறேன்

இளம் வீரர்களுக்கு வழி விடுகிறேன்

தனது ஓய்வு குறித்து அகர்கர் கூறுகையில், இளம் வீரர்களுக்கு வழி விடும் வகையில் ஓய்வை அறிவிப்பதாக கூறியுள்ளார்.

Story first published: Thursday, October 17, 2013, 15:45 [IST]
Other articles published on Oct 17, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+