அகர்கர்லாம் அட்வைஸ் பண்ற நெலம ஆகிப்போச்சே டோணிக்கு

Posted By:

மும்பை: வர வர, நம்ம தல டோணியோ நெலம, பருத்திவீரன் படத்து கார்த்தி மாதிரி ஆகிடுச்சிங்க. கண்ட ஆளெல்லாம் புத்தி சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.

அட, கங்குலி, லட்சுமணன் மாதிரி எவர்கிரீன் ஆட்கள் டோணியோட ஆட்ட திறமைய விமர்சனம் பண்ணியத கூட ஏத்துக்கலாம். ஆனா, அகர்க்கர் மாதிரி பவுலரெல்லாம் டோணி பேட்டிங்கை குறை சொல்ல ஆரம்பிச்சிட்டாங்களே. பச்.. என்ற முனகல் சத்தம் டோணி ரசிகர்கள் வட்டாரத்தில் இப்போது கேட்க தொடங்கியுள்ளது.

இணையதளத்திற்கு பேட்டியளித்த, அகர்க்கர், டோணியை நீக்கிவிட்டு டி20 போட்டிகளில் புதியவர்களுக்கு வாய்ப்பு தரலாம் என கூறியதுதான் இந்த அமளிக்கு காரணம்.

நீக்குங்க

நீக்குங்க

ஒருநாள் போட்டியில் ஓகே, இருந்துவிட்டு போகட்டும். டி20ல் இன்னும் டோணியை ஏன் சேர்த்து வைத்துக்கொள்கிறீர்கள். இப்போது புதியவர்களை தேடும் நேரம் என அகர்க்கர் சொல்லப்போக அவருக்கு கெட்ட நேரம் ஆரம்பித்துவிட்டது. ஆளாளுக்கு டிவிட்டரில் அவரை தேடிப்போய் திட்ட ஆரம்பித்துள்ளனர்.

ரசிகர்கள் இப்படி கேக்குறாங்க

ரசிகர்கள் இப்படி கேக்குறாங்க

அகர்க்கர் இந்தியா கண்ட மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர். தென் ஆப்பிரிக்காவின் ஆலன் டொனால்ட் போல ஆரம்ப காலத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர். ஆனால் ரன்னை வாரிக்கொடுக்க தயங்காதவர். பிற பவுலர்களை ஒப்பிட்டால் இவர் பேட்டிங் தேவலாம். ஆனாலும், டோணியை பற்றி நீங்க எப்படி சொல்லலாம் என்பதுதான் ரசிகர்கள் கேள்வி.

நீங்க யாரு முடிவு செய்ய?

இந்தியா கண்ட பெஸ்ட் கிரிக்கெட் வீரரை எப்படி நீங்கள் போகிற போக்கில் கமெண்ட் அடிக்கலாம். எப்போது யார் ஓய்வு பெற வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்ய கூடாது என்கிறார் இந்த தீவிர விசிறி.

டோணியை பயன்படுத்துகிறார்கள்

ஓய்வில் இருப்பதாலும், மீடியா கவனத்தை பெறவும் டோணியை அகர்க்கர் பயன்படுத்துகிறார் என்று பொங்குகிறார் இந்த வலைஞர். அகர்க்கர் இப்போது வர்ணனையாளராகவும் உள்ளதால் எதிர்ப்பும் அதிகமாக உள்ளது.

Story first published: Saturday, November 11, 2017, 16:08 [IST]
Other articles published on Nov 11, 2017
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற