Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அலி பாய் அலி பாய்.. வலிமை அப்டேட்.. இங்கிலாந்து வீரரிடம் சேப்பாக்கத்தில் கேட்ட அஜித் பேன்ஸ்.. வீடியோ

சென்னை: இங்கிலாந்து இந்தியா இடையில் சென்னையில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அதிரடியாக நடந்து கொண்டு இருக்கிறது. புஜாரா, சுப்மான் கில், கோலி ஆகியோர் மோசமாக ஆடி ஏமாற்றம் அளித்தனர்.

அதிலும் கோலி, கில் டக் அவுட் ஆகி இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தனர். இதில் தொடக்கத்தில் திணறிய அணி தற்போது அதிரடி காட்ட தொடங்கி உள்ளது.

இங்கிலாந்து

இங்கிலாந்து

இங்கிலாந்து இந்தியா இடையில் சென்னையில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது. இந்த போட்டியில் மொயின் அலி பீல்டிங் நிற்கும் போது அவரிடம் தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் அவ்வப்போது ஆங்கிலத்தில் பேசினார்கள். அலி பாய், அலி பாய் என்று செல்லமாக பேசினார்கள்.

அஜித்

அஜித்

இதில் திடீரென அங்கு இருந்த அஜித் ரசிகர் ஒருவர் அலி பாய்.. அலி பாய்.. வலிமை அப்டேட் பிளீஸ் என்று அஜித் ரசிகர்கள் கேட்டனர் . அஜித் நடிக்கும் வலிமை படத்தின் அப்டேட் வேண்டும் என்று இவர்கள் கேட்டனர். இது பெரிய வைரலானது.

வலிமை படம்

வலிமை படம்

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் தயாராகி வரும் படம் வலிமை. இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் சில நாட்களில் முடிய உள்ளது. இந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேட்கிறார்கள்

இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் தாங்கள் பார்க்க கூடிய நபர்களிடம் எல்லாம் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். பல பிரபலங்களிடம் வலிமை படத்தின் அப்டேட் வேண்டும் என்று கேட்டு வருகிறார்கள். பிரச்சாரத்திற்கு சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கூட வலிமை படத்தின் அப்டேட்டை அஜித் ரசிகர்கள் கேட்டது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, February 13, 2021, 23:29 [IST]
Other articles published on Feb 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+