Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வலிமைனா என்ன பாஸ்?.. அஸ்வினிடம் நேராக சென்று சந்தேகம் கேட்ட அலி பாய்.. அஜித் பேன்ஸ் வேற லெவல்தான்!

சென்னை: நடிகர் அஜித் நடிக்கும் வலிமை படம் குறித்து இந்திய வீரர் அஸ்வின் சுவாரசியமான விஷயம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1 -1 என்று சமன் செய்துள்ளது.

இந்திய அணியில் எல்லா வீரர்களும் சிறப்பாக ஆடி வெற்றிக்கு உதவி உள்ளனர். முக்கியமாக இந்திய அணியின் வெற்றிக்கு இன்று அஸ்வின் முக்கிய காரணமாக இருந்தார்.

அஸ்வின்

அஸ்வின்

இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் மொயின் அலி பீல்டிங் செய்து கொண்டு இருந்த போது அவரிடம் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் குறித்து கேட்டனர். அலி பாய், அலி பாய் வலிமை படத்தின் அப்டேட் சொல்லுங்கள் என்று கேட்டனர்.

வைரல்

வைரல்

இதை புரிந்து கொள்ள முடியாத மொயின் அலி அஜித் ரசிகர்களை பார்த்து சிரித்துவிட்டு, திரும்பிவிட்டார்.இந்த நிலையில் மூத்த வீரர் அஸ்வின் இதுகுறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், நான் பீல்டிங் செய்து கொண்டு இருக்கும் போது திடீரென ரசிகர்கள் சத்தமாக வலிமை அப்டேட் குறித்து கேட்டனர்.

வலிமை படம்

வலிமை படம்

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. போட்டிக்கு இடையில் இப்படி கேட்டதால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அதன்பின் கூகுள் செய்து பார்த்தால் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. டெஸ்ட் போட்டியின் போது கேட்டதால் என்னால் புரிந்த கொள்ள முடியவில்லை.

வீடியோ

மறுநாள் மொயின் அலி என்னிடம் வந்த வலிமை என்றால் என்ன என்று கேட்டார். அவரிடமும் இதேபோல் வலிமை படத்தின் படத்தின் அப்டேட் குறித்து கேட்டுள்ளனர். அஜித் ரசிகர்கள் உண்மையில் கலக்கிட்டாங்க. இதை நான் எதிர்பார்க்கவில்லை .

செம்ம பாஸ்

செம்ம பாஸ்

இங்கிலாந்து வீரரிடம் வலிமை அப்டேட் குறித்து கேட்டதெல்லாம் வேற லெவல். இதை என்னால் நம்பவே முடியவில்லை . தமிழர்களின் சினிமா ஆர்வத்திற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு என்று அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Wednesday, February 17, 2021, 8:59 [IST]
Other articles published on Feb 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+