
சிஎஸ்கே மீது விமர்சனம்
துணிவு திரைப்படத்தில் சிஎஸ்கே வை மட்டம் தட்டும் விதமாகவும் தமிழக ரசிகர்களை விமர்சிக்கும் விதமாகவும் ஹச் வினோத் ஒரு வசனத்தை வைத்திருக்கிறார். அதில் ஐபிஎல் போட்டிகளில் தடை செய்யப்பட்ட அணிகள் மீண்டும் வரும்போது அதனை ரசிகர்கள் கொண்டாடினார்கள் தவிர அந்த அணிகளை புறந்தள்ளவில்லை. இதுதான் மக்களின் மனசு என்பது போல் ஒரு வசனம் இடம் பெற்றுள்ளது.

ரசிகர்கள் பதிலடி
இது சிஎஸ்கே அணியை குற்றம் சாட்டுவது போலவும் தமிழக ரசிகர்கள் சி எஸ் கே வை புறந்தள்ள வேண்டும் என்பது போன்ற கருத்தை வெளிப்படுத்துகிறது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ஐபிஎல் சூதாட்டத்தில் நடந்தது என்ன என்பது குறித்து ஏதும் தெரியாமல் படத்தில் வசனங்கள் வைத்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர் .

உச்ச நீதிமன்ற தீர்ப்பு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய வீரர்களுக்கும் ஐபிஎல் சூதாட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று உச்ச நீதிமன்றமே விளக்கம் அளித்துள்ள நிலையில் எச் வினோத் ஏன் இப்படி ஒரு வசனத்தை வைத்திருக்கிறார் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் சிஎஸ்கே அணியின் இருந்த குருநாத் மெய்யப்பன் என்பவர் தான் கைது செய்யப்பட்டதாகவும் தனிப்பட்ட முறையில் அவர் செய்த தவறுக்கு ஒட்டுமொத்த சிஎஸ்கே வீரர்களையும் களங்கப்படுத்துவது சரி அல்ல என்று தோனி ரசிகர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

வசனத்தை திரும்ப பெறுங்கள்
சிஎஸ்கே தொடர்பான வசனத்தை ஹச் வினோத் திரும்பப் பெற வேண்டும் எனவும் கிரிக்கெட் ரசிகர்கள் வலியுறுத்துள்ளனர். ஏற்கனவே தல என்ற பெயருக்கு யார் சொந்தக்காரர் என்று அஜித் ரசிகர்களும் தோனி ரசிகர்களும் மோதிக்கொண்டனர். இதனால் தல என்று என்னை அழைக்க வேண்டாம் என அஜித் விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் இருதரப்பு ரசிகர்களிடையே துணிவு படத்தின் வசனம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











