For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வாய்ப்பை வீணடிக்காதீர்கள்.. பிறகு வருத்தப்படுவீர்கள்! சஞ்சு சாம்சனுக்கு முன்னாள் வீரர்கள் அறிவுரை

மும்பை : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியில் யார் விக்கெட் கீப்பர் என்ற முடிவு இன்னும் தெரியவில்லை.

தற்போது ரோகித் சர்மா, விராட் கோலி, கில் ஆகியோரின் பெயர்கள் மட்டும்தான் முடிவாகி உள்ளது. கீழ் வரிசையில் ஜடேஜா, பும்ரா, முகமது சமி, முகமது சிராஜ் ஆகியோர் பெயர்கள் தேர்வாகிவிடும்.

Akash chopra and danish kaneria warns sanju samson not to waste the chance

சுழற் பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ், சாஹல் ஆகிய இருவரும் இடம் பெற வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் நடு வரிசையிலும் விக்கெட் கீப்பர் யார் என்பதில் தான் தற்போது குழப்பம் ஏற்பட்டு வருகிறது. இஷான் கிஷன் வெஸ்ட் இண்டீஸ் எதிரான தொடரில் அரை சதம் அடித்து அசத்திய நிலையில் அவருக்கு முன்னுரிமை வழங்கப்படலாம் என தெரிகிறது.

எனினும் தொடக்க வீரர்களாக ஏற்கனவே ரோகித் சர்மாவும் கில்லும் இல்லாத நிலையில் நடுவரிசையில் சஞ்சு சாம்சனா இல்லை இசான் கிஷானா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் சாம்சன் வெஸ்ட் இண்டீஸ் எதிரான ஒரு நாள் போட்டியில் ஒரு அரைசதத்தை அடித்து இருந்தாலும் டி20 கிரிக்கெட்டில் அவர் இரண்டு ஆட்டங்களில் சேர்த்து மொத்தமே 19 ரன்கள் தான் அடித்திருக்கிறார்.

இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா சஞ்சு சாம்சனுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார். அதில் சாம்சன் உங்களுடைய வாய்ப்பை நீங்கள் வீணடிக்காதீர்கள். உங்களுக்கு கிடைக்கும் போட்டிகளில் நீங்கள் ரன் அடிக்கவில்லை என்றால் நீங்கள் பிற்காலத்தில் மிகவும் வருத்தப்படுவீர்கள். இஷான் கிஷன் மேலே வருவது முக்கியமல்ல சஞ்சு சான்சன் இதற்கு மேல் கீழே போக கூடாது.

நீங்கள் இருவருமே டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் வெளியேறி ஜித்தேஷ் சர்மா கூட பிளேயிங் லெவனில் இடம் பெறலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேபோன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா அளித்துள்ள பேட்டியில்,சஞ்சு சாம்சன் எப்போது நீங்கள் ரன் அடிக்கப் போகிறீர்கள்? உங்களுக்காக நான் தொடர்ந்து பேசி வருகின்றேன். ஆனால் உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை நீங்கள் வீணடித்து வருகிறீர்கள் என்று குறை கூறியுள்ளார்.

Story first published: Thursday, August 10, 2023, 11:05 [IST]
Other articles published on Aug 10, 2023
English summary
Akash chopra and danish kaneria warns sanju samson not to waste the chance வாய்ப்பை வீணடிக்காதீர்கள்.. பிறகு வருத்தப்படுவீர்கள்! சஞ்சு சாம்சனுக்கு முன்னாள் வீரர்கள் அறிவுரை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+