Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியின் பேட்டிங் வரிசை மாற்றம்..காரணமே வேறு.. டிராவிட்டின் மெகா பிளான்.. ஆகாஷ் சோப்ரா கருத்து

டோமினிக்கா : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் பேட்டிங் வரிசை மாற்றப்பட்டதற்கு பின்னால் பெரிய ப்ளானே இருப்பதாக ஆகாஷ் சோப்ரா கூறியிருக்கிறார்.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய பிறகு பல மாற்றங்கள் தற்போது டெஸ்ட் அணியில் செய்யப்பட்டிருக்கிறது.

அதில் முதல் படியாக தொடக்க வீரராக ஜெயஸ்வால் களம் இறங்கி இருக்கிறார்.இதன் மூலம் சுப்மன் கில் மூன்றாவது வீரராக விளையாட உள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா, டிராவிட் பயிற்சியாளராக அடுத்த மூன்று ஆண்டுகள் குறித்து யோசிக்க தொடங்கி விட்டதாக கூறியுள்ளார்.

Akash chopra reveals the big plan of rahul dravid behind batting order changes

தற்போது கில் மூன்றாவது வீரராக இருக்கிறார். இதனால் புஜாரா இனி அணிக்குள் வர முடியுமா முடியாதா என்று தெரியவில்லை. ரகானே அணிக்கு திரும்பியதால் புஜாராவுக்கும் வாய்ப்பு கொடுப்பார்கள் என நினைக்கிறேன்.தற்போது ரோகித் சர்மாவுக்கும் வயதாகி வருகிறது. அவர் அதிகபட்சமாக இன்னும் இரண்டு ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடலாம்.

அதன் பிறகு அந்த இடத்திற்கு ருதுராஜ் கெய்க்வாட்டை அணியில் சேர்ப்பார்கள். இதேபோன்று விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது தடுமாறி வருகிறார். அவரும் இன்னும் எத்தனை ஆண்டு டெஸ்டில் விளையாடுவார் என்று தெரியவில்லை. அவர் சென்று விட்டால் மூன்றாவது இடத்தில் விளையாடும் கில், நான்காவது இடத்திற்கு சென்று விடுவார்.

கில்லை அதற்கு தயார்படுத்த தான் இப்போது மூன்றாவது இடத்தில் டிராவிட் விளையாட வைக்கிறார் என எண்ணுகிறேன். இதேபோன்று விக்கெட் கீப்பர் இடத்திலும் ரிஷப் பண்ட்க்கு மாற்றாக இந்திய அணி நிர்வாகம் இசான் கிஷனை தேர்வு செய்திருக்கிறது. வேக பந்துவீச்சிலும் முகமது சமி எத்தனை ஆண்டு விளையாடுவார் என்று தெரியவில்லை. அதற்காக தான் இந்தத் தொடரில் வேகப் பந்துவீச்சை சோதிப்பதற்காக பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் காயத்திலிருந்து திரும்பிய பிறகு நடு வரிசையில் விளையாட வைக்கப்படலாம். ஒரு காலத்தில் டிராவிட், லக்ஷ்மன், சச்சின் ஆகியோர் சென்ற பிறகு இந்திய அணி கொஞ்சம் தடுமாறியது. இதனால் இப்போது அணியில் மாற்றத்தை டிராவிட் ஏற்படுத்திருக்கிறார் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

Story first published: Friday, July 14, 2023, 0:05 [IST]
Other articles published on Jul 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+