Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

21 வயது வீரரை இப்படியா கொடுமைப்படுத்துவது? கவுதம் கம்பீருக்கு முன்னாள் வீரர் எச்சரிக்கை

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் ஹர்திக் பாண்டியா தற்போது டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகள தொடர்களில் தான் விளையாடி வருகிறார். ஷர்துல் தாக்கூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்றாக விளையாடி வந்த நிலையில் அவருக்கும் தற்போது வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்த சூழலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நிதிஷ்குமார் ரெட்டி 5 போட்டிகளிலும் களமிறங்கினார். இதில் மெல்போர்னில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் நிதிஷ்குமார் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் நிதிஷ் குமார் ரெட்டி தேர்வு செய்யப்பட்டார்.

Ind vs Eng Nitish kumar Gautam gambhir

ஆனால் முதல் ஆட்டத்தில் பேட்டிங், பந்துவீச்சு என எதுவுமே செய்யாத நிலையில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் எஞ்சிய தொடரிலிருந்து அவர் விலகி இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, நிதிஷ் குமார் ரெட்டியை பத்திரமாக கையாள வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், "ஐபிஎல் மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான டி20 என நிதிஷ் குமார் ரெட்டி அபாரமாக விளையாடி இருக்கிறார். தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகளும் அவர் விளையாடி உள்ளார். இந்த நிலையில் அவருக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது.நன்றாக விளையாடி வந்து வீரருக்கு ஏன் திடீரென்று காயம் ஏற்பட்டிருக்கிறது என நீங்கள் யோசிக்கலாம்".

"ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும்போது பனிச்சுமை என்பது வித்தியாசமாக இருக்கும். பனிச்சுமை மற்றும் உடலளவில் நெருக்கடி ஏற்படும். அவர் ஏற்கனவே 5 டெஸ்ட் போட்டுக்கு தொடர்ந்து விளையாடுகிறார். பந்துவீச்சும் செய்திருக்கிறார்.பேட்டிங்கும் விளையாடி இருக்கிறார்".
இது அவருடைய உடல் வலுவை பெரும் அளவு பாதிக்கப்பட்டிருக்கும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அவர் சிறுவர். அவருக்கு 21 வயது தான் ஆகிறது".

"இவ்வளவு பணிச்சுமையை அவருடைய உடல் நிச்சயம் தாங்காது தற்போது அவருக்கு காயம் ஏற்பட்டிருப்பதால் தன்னுடைய உடல் இவ்வளவு பணிச்சுமையையும் நெருக்கடியும் தாங்காது என்பதை அவர் அறிந்து மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார். எனவே அவரை பத்திரமாக கையாள வேண்டும். நிதிஷ் குமாருக்கு பதில் தற்போது சிவம் துபே அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதனை முன்பே செய்திருக்கலாம் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்".

Story first published: Sunday, January 26, 2025, 17:20 [IST]
Other articles published on Jan 26, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+