டோப் தடையிலிருந்து தப்பிய அக்தார், ஆசிப்
கராச்சி:ஊக்க மருந்து உட்கொண்டதால் பாகிஸ்தான் வேகப பந்து வீச்சாளர்கள் சோயிப் அக்தார் மற்றும் முகம்மது ஆசிப்ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தடையை டிரிப்யூனல் ரத்து செய்தது.அக்தாரும், ஆசிப்பும் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை உட்கொண்டது அவர்களது சிறுநீர்ப் பரிசோதனைமூலம் தெரிய வந்தது. இதையடுத்து அக்தாருக்கு 2 ஆண்டுகளும், ஆசிப்புக்கு ஒரு ஆண்டும் விளையாட தடைவிதித்து பாகிஸ்தான்கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து இருவரும் டிரிப்யூனலில் மேல் முறையீடு செய்தனர். இந்த மேல் முறையீட்டை 3 பேர்கொண்ட டிரிப்யூனல் விசாரித்தது. விசாரணைக்குப் பின்னர் டிரிப்யூனல் தலைவர் பக்ருதீன் இப்ராகிம்செய்தியாளர்களிடம் பேசுகையில், 3 பேரில் 2 பேர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தடையை ரத்து செய்துகருத்து தெரிவித்தனர்.எனவே, இரு வீரர்களுக்கும் விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்படுகிறது.இந்த குற்றத்தை இருவரும் வேண்டும் என்றே செய்திருப்பதாக நாங்கள் கருதவில்லை. எனவே இருவர் மீதானதடையையும் டிரிப்யூனலின் பெரும்பான்மை கருத்துப்படி ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது என்றார்.
இந்தத் தீர்ப்பை ஆசிப் வரவேற்றுள்ளார். மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஆடதனக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்புவதாக அவர் கூறியுள்ளார்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:47 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications