Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன முட்டாள் தனமா இருக்கு.. யாராவது இப்படி செய்வாங்களா? ஸ்மித்துக்கு ஆலன் பார்டர் கண்டனம்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி தோல்வியை தழுவியது. இதில் அந்த அணியில் சிறப்பாக விளையாடியவர் என்றால் ஸ்மித் மட்டும் தான்.

இரண்டு இன்னிங்ஸில் தொடக்கத்தை அவர் பெற்றாலும் அதனை பெரிய ஸ்கோராக மாற்றவில்லை. இந்த நிலையில் நன்றாக விளையாடிய ஸ்மித்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஆலன் பார்டர் கடுமையாக விமர்சித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

நன்றாக விளையாடுகிற வீரரை ஏன் இவர் திட்டுகிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதனை தற்போது பார்க்கலாம்.

ஸ்மித் செயல்

ஸ்மித் செயல்

ஸ்மித் எப்போதுமே பேட்டிங்கை வித்தியாசமாக விளையாடக் கூடியவர். பந்தை அடிக்காமல் லீவ் செய்வதிலே தனி ஸ்டைலை ஸ்மித் கடைப்பிடித்து வருகிறார். இந்த நிலையில் ஸ்மித் தற்போது புதிய பழக்கம் ஒன்றை கற்றுக் கொண்டுள்ளார். அதாவது சுழல் பந்துவீச்சாளர் தமக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் சிறப்பாக பந்து வீசினால் அவருக்கு கட்டைவிரலை உயர்த்தி வாழ்த்து கூறி வருகிறார்.

கடும் கண்டனம்

கடும் கண்டனம்

இதற்கு தான் ஆலன் பார்டர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ஆஸ்திரேலியாவின் பெயரையே தற்போது இருக்கும் வீரர்கள் கெடுத்து விட்டார்கள். ஆஸ்திரேலிய வீரர்கள் எப்போதுமே களத்தில் கடினமாக நடந்து கொள்வார்கள். ஆனால் தற்போது நெருக்கடி கொடுக்கும் வகையில் பந்து வீசும் வீரருக்கு நமது பேட்ஸ்மேன்கள் கட்டை விரலை உயர்த்தி பாராட்டுகிறார்கள். என்ன எழவுடா இது?

முட்டாள்தனமானது

முட்டாள்தனமானது

கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியாது. முட்டாள்தனமாக நடந்து கொள்ளாதீர்கள்.ஆஸ்திரேலிய எப்போதும் களத்தில் ஆக்ரோஷமாக விளையாடுவார்கள். ஆனால் எதிரணி வீரர்களை பாராட்டும் வகையில் கட்டைவிரலை உயர்த்துவது its Bloody hell. முதல் டெஸ்ட் போட்டியில் மனதளவில் பல்வேறு வீரர்களுக்கு காயங்கள் ஏற்பட்டிருக்கும். இதனால் வரும் நாட்களில் அவர்கள் சிறப்பாக விளையாடுவது மிகவும் கடினமே. நாம் எது வேண்டுமானாலும் பேசலாம் .ஆனால் களத்தில் விளையாடும் வீரர்கள் தங்களின் பேட்டை வைத்து தான் பதில் சொல்ல வேண்டும்.

ஆலன் பார்டர் அறிவுரை

ஆலன் பார்டர் அறிவுரை

இங்கிருந்து டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவுக்கு மிகவும் கடினமாக இருக்கும் .ஆனால் அதனை அவர்கள் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். வீரர்கள் தங்களுடைய ஆத்மார்த்த ஆட்டத்தை தேடி கண்டுபிடிக்க வேண்டும். இரவில் அணி வீரர்கள் ஒன்றிணைந்து கொஞ்சம் குடியுங்கள். இன்று நடந்ததை அத்துடன் மறந்து விடுங்கள். மோசமாக நம்மால் இவ்வளவுதான் விளையாட முடியும். இன்றிலிருந்து நாம் வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள் என்று ஆலன்பார்டர் கூறியுள்ளார்.

Story first published: Sunday, February 12, 2023, 12:42 [IST]
Other articles published on Feb 12, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+