For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அது ஒரு மோசமான சம்பவம்..25 ஆண்டுக்கு பிறகு டிராவிட்டிடம் மன்னிப்பு கோரிய ஆலன் டோனால்ட்..என்ன நடந்தது

சட்டோகிராம் : வங்கதேச கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக உள்ள ஆலன் டோனால்ட், ராகுல் டிராவிட்டிடம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மன்னிப்பு கூறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆலன் டோனால்ட், அவருடைய காலத்தில் விளையாடும்போது தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக விளங்கி இருக்கிறார்.

தற்போது இந்திய வங்கதேச டெஸ்ட் தொடரின் போது டிராவிட்டும், ஆலன் டோனால்டும் சந்தித்து பேசி இருக்கிறார்கள்.

டிராவிட் கிண்டல்

டிராவிட் கிண்டல்

அப்போது ராகுல் டிராவிட் உங்களை பயிற்சியாளராக பார்ப்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது. முன்பெல்லாம் முகத்தில் கிரீம் பூசி பேட்ஸ்மேன்களை பயமுறுத்தும் அளவுக்கு காணப்படுவீர்கள். இப்போது தான் பார்க்க நன்றாக இருக்கிறீர்கள் என்று கூறியிருக்கிறார். இதனை டிராவிட் தற்போது செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

1997 சம்பவம்

1997 சம்பவம்

இதை ஆலன் டோனால்ட் கேட்டதும், 1997 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆலன் டோனல்ட் 1997 ஆம் ஆண்டு இந்திய அணி டர்பனில் ஒரு நாள் போட்டியில் விளையாடியது. அப்போது சச்சினும் டிராவிட்டும் எங்கள் அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார்கள். இதனால் எனக்கு கோபம் வந்துவிட்டது.

மன்னிப்பு

மன்னிப்பு

நான் அப்போது டிராவிட்டை அவதூறாக பேசி ஸ்லேஜிங் செய்தேன். அது ஒரு மோசமான சம்பவம். அது குறித்து தற்போது நான் பேச விரும்பவில்லை. சின்னத்தனமான காரியத்தை செய்து அவருடைய விக்கெட்டை நான் வீழ்த்தினேன். ஆனால் இப்போதும் டிராவிட்டை பார்த்து நான் அன்று சொன்ன விஷயத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவர் ஒரு சிறந்த வீரராக இந்தியாவுக்காக விளங்கினார்.

விடுதிக்கு அழைத்து செல்கிறேன்

விடுதிக்கு அழைத்து செல்கிறேன்

ராகுல் டிராவிட் இந்த பேட்டியை பார்த்தால், என்னை மன்னித்து கொள்ளுங்கள். நான் உங்களை விடுதிக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். இந்த பேட்டியை பார்த்த ராகுல் டிராவிட் கலகலன்னு சிரித்து உங்களுடன் செல்லும் அந்த நாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் தான் பில் பே செய்ய வேண்டும் என்று கூறி கிண்டல் அடித்திருக்கிறார்.1997 ஆம் ஆண்டு இந்தியா ,தென்னாப்பிரிக்கா ஜிம்பாப்வே அணிகள் மோதிய முத்தரப்பு ஒருநாள் போட்டி நடைபெற்றது.

என்ன போட்டி?

என்ன போட்டி?

இதில் இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி ஐம்பது ஓவர் முடிவில் 278 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். மழை குறிக்கிட்டதால் 40 ஓவரில் 252 ரன்கள் அடிக்க வேண்டும் என இருந்தது.அப்போது டிராவிட்டை கடுமையாக டோனால்ட் ஸ்லேட்ஜ் செய்தார். அன்றைய ஆட்டத்தில் ராகுல் டிராவிட் 94 பந்துகளை எதிர் கொண்டு 84 ரன்கள் விளாசினார்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

குறிப்பாக டொனால்டு ஓவரின் அவர் சிக்ஸர்களை அடித்து அசத்தினார். எனும் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் அந்த போட்டியில் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டிக்குப் பிறகு டிராவிட்டிடம் மன்னிப்பு கேட்க டோனால்ட் விரும்பினார். ஆனால் இந்திய அணி நிர்வாகம் அவரை சந்திக்க அனுமதி அளிக்கவில்லை என்பது வரலாறு.

Story first published: Thursday, December 15, 2022, 15:19 [IST]
Other articles published on Dec 15, 2022
English summary
Alan Donald apology to Rahul dravid after 25 years over ugly incident
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+