Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓய்வுபெறுகிறார் அலயஸ்டர் குக்.. இந்தியாவில் தொடங்கி இந்தியாவிலேயே முடிந்த கிரிக்கெட் கதை!

லண்டன்: இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலயஸ்டர் குக் ஓய்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து அலயஸ்டர் குக் ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார்.

அவருக்கு 33 வயதுதான் ஆகிறது. கடந்த ஐந்து மாதமாக சரியாக விளையாடாததை காரணம் காட்டி அவர் ஓய்வு அறிவித்துள்ளார்.

இதுதான் சரியான நேரம் என்று ஓய்வு குறித்து அவர் கூறியுள்ளார். லண்டனில் நடக்க உள்ள இந்தியாவிற்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து அவர் ஓய்வு பெறுவார்.

அறிமுகமும் முடிவும்

அறிமுகமும் முடிவும்

அலயஸ்டர் குக் 2006ம் ஆண்டு முதன்முதலாக இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அறிமுகம் ஆனார். நாக்பூரில் நடந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக அறிமுகம் ஆனார். அவர் அறிமுகம் ஆன போட்டியின் இரண்டாவது இன்னிங்சிலேயே செஞ்சுரி அடித்தார். இதுவரை அவர் 160 டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளார். தற்போது கடைசி போட்டியும் இந்தியாவிற்கு எதிராக விளையாட உள்ளார்.

வெற்றி தோல்வி

வெற்றி தோல்வி

இவர் இங்கிலாந்து அணியின் முக்கியமான கேப்டன்களில் ஒருவர். ஆஷஸ் தொடரில் இரண்டு முறை ஆஸ்திரேலிய அணியை கேப்டனாக வீழ்த்தியுள்ளார். ஆனால் 2013-14ல் ஆஸ்திரேலியாவில் நடந்த ஆஷஸ் தொடரில் மோசமாக 5-0 இங்கிலாந்து தோற்ற பின் கேப்டன் பதவிக்கு பிரச்சனை வந்தது. அதன்பின் இந்தியா தொடரில் 2016 இங்கிலாந்து 4-0 என்று தோற்றது, இதனால் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இந்த மாற்றமும் இந்தியாவிற்கு எதிராகவே நடந்தது.

என்ன சாதனை

இதுவரை அவர் 160 டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளார். அதில் 12254 ரன்கள் எடுத்துள்ளார். இங்கிலாந்தின் சிறந்த டெஸ்ட் வீரர்களில் இவரும் ஒருவர். 92 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ள இவர் 3204 ரன்கள் எடுத்துள்ளார். மொத்தமாக 37 சதம் அடித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் 5 இரட்டை சதம் அடித்துள்ளார். மொத்தமாக 75 அரைசதம் அடித்துள்ளார். 4 டி20 போட்டியில் விளையாடி உள்ளார். 1792 பவுண்டரியும், 22 சிக்ஸும் அடித்துள்ளார்.

குக் பேட்டி

தற்போது ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அவர் ''இது ஒரு துக்ககரமான நாள். நான் இதை சிரித்த முகத்துடனும் செய்யமுடியும் . நான் தேவையானதை எல்லாம் கொடுத்துவிட்டேன், என்னிடம் மிச்சம் ஏதுமில்லை. நான் நினைத்ததை விடஅதிக சாதனை செய்துவிட்டேன். இங்கிலாந்து அணிக்காக விளையாடியது சந்தோசம் அளிக்கிறது. நான் ஓய்வு பெற இதுதான் சரியான நேரம்'' என்றுள்ளார்.

Story first published: Monday, September 3, 2018, 17:55 [IST]
Other articles published on Sep 3, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+