Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

100வது டெஸ்ட்.. பெரிய முட்டை... குக்குக்கு வந்த சாதனை + சோதனை!

பெர்த்: யாருக்குமே கிடைக்க முடியாத அரிய பரிசு ஒன்று இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் குக்குக்கு் கிடைத்துள்ளது.

தனது 100வது டெஸ்ட் போட்டியில் அவர் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனதே அந்தப் பரிசு. இது ஒரு புதிய சாதனையாக மாறி அவரை டென்ஷனாக்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆசஷ் தொடரில் ஆடி வரும் குக், 3வது டெஸ்ட் போட்டியி்தான் இந்த சோதனையைச் சந்தித்தார்.

வாகா மைதானத்தில் மறக்க முடியாத முட்டை

வாகா மைதானத்தில் மறக்க முடியாத முட்டை

பெர்த், வாகா மைதானத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையிலான 3வது ஆசஷ் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.

குக்குக்கு 100வது டெஸ்ட்

குக்குக்கு 100வது டெஸ்ட்

இந்த டெஸ்ட் போட்டி குக்குக்கு 100வது டெஸ்ட் போட்டியாகும்.

சச்சின் சாதனையை முறியடித்த குக்

சச்சின் சாதனையை முறியடித்த குக்

இந்தப் போட்டியில் நுழைந்தபோது சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் குக். அதாவது மிகவும் இளம் வயதில் 100 டெஸ்ட் போட்டியில் ஆடிய வீரராக இதுவரை சச்சின்தான் இருந்தார். அதை தற்போது குக் முறியடித்துள்ளார்.

ஆனால் முட்டை வந்துருச்சே...

ஆனால் முட்டை வந்துருச்சே...

ஆனால் அவரது சந்தோஷம் சில மணி நேரம் கூட நீடிக்கவில்லை. காரணம், 2வது இன்னிங்ஸில் குக் டக் அவுட் ஆகி விட்டார்.

இதுதான் முதல் முட்டை...

இதுதான் முதல் முட்டை...

உலக டெஸ்ட் வரலாற்றில் 100வது டெஸ்ட் போட்டியில் டக் அவுட் ஆன முதல் வீரர் என்ற பெயரும் குக்குக்குக் கிடைத்துள்ளது. குக்குக்கு இந்த பெருமை வந்து சேர காரணமானவர் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் ரியான் ஹாரிஸ் ஆவார்.

கற்பு பறி போனது போல...

கற்பு பறி போனது போல...

கிட்டத்தட்ட கற்பு பறி போனது போல பரிதவித்துப் போயிருக்கிறாராம் குக். காரணம் இதற்கு முன்பு விளையாடிய 99 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் டக் அவுட் ஆனதே இல்லை. அதாவது முதல் பந்திலேயே அவர் அவுட்டானதில்லை. இதுதான் முதல் முறையாம்.

முதல் இன்னிங்ஸில் 72

முதல் இன்னிங்ஸில் 72

இருப்பினும் முதல் இன்னிங்ஸில் குக் 72 ரன்கள் எடுத்திருந்தார்.

கிளார்க்குக்கும் இது 100வது டெஸ்ட்

கிளார்க்குக்கும் இது 100வது டெஸ்ட்

ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க்குக்கும் இது 100வது டெஸ்ட் போட்டியாகும் என்பது குறிப்பிடத்தகக்து.

ஆஸ்திரேலியா முன்னிலை

ஆஸ்திரேலியா முன்னிலை

5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஆஸ்திரேலியா அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்து வருகிறது.

Story first published: Monday, December 16, 2013, 14:38 [IST]
Other articles published on Dec 16, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+