Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐயோ போச்சே.!! ஜோ ரூட்-ஐ குறிவைத்து தாக்கிய மிட்செல் ஸ்டார்க்.. ஆஷஸ் தொடரில் பரபர சம்பவம்!

ஓவல்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட்டிற்கு உயிர் நாடியில் நங்கென விழுந்த அடி, ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில் 2வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து வெற்றிக்கு அருகில் சென்றுவிட்டது.

2வது டெஸ்ட் போட்டி

2வது டெஸ்ட் போட்டி

இந்த போட்டியும் இங்கிலாந்து அணிக்கு மிகவும் மோசமாகவே அமைந்தது. முதல் இன்னிங்ஸில் 236 ரன்களுக்கு ஆல் அவுட்டான அந்த அணி, 2வது இன்னிங்ஸில் 468 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. 2வது டெஸ்ட் ஆட்டம் தான் இங்கிலாந்து அணிக்கு எதிராக இருக்கிறது என்று பார்த்தால், கேப்டன் ஜோ ரூட்டிற்கும் வினையாகவே இருந்துள்ளது. அதுவும் உயிர் நாடிக்கே குறிவைத்துள்ளது.

பலத்த அடி

பலத்த அடி

4ம் நாள் ஆட்டத்தின் போது ஜோ ரூட் 24 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடி வந்தார். அப்போது ஆஸ்திரேலிய பவுலர் மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்து, ஜோ ரூட்டின் உயிர் நாடியில் பலமாக பட்டது. பொளுக்கென்று விழுந்த அடியால், மைதானத்திலேயே ஜோ ரூட் சுருண்டு விழுந்தார். உலகமே ஒரு நிமிடம் நின்றது போல, அவரின் அழுகை அனைவரையும் மனம் உருக வைத்துள்ளது. இதுகுறித்த வீடியோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

கிண்டல் அடித்த குக்

கிண்டல் அடித்த குக்

இந்நிலையில் இந்த சம்பவத்தை வைத்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலெக்ஸ்டர் குக், கிண்டல் அடித்துள்ளார். கடந்த 2015ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது குக்-கிற்கு இதே போன்று உயிர்நாடியில் அடி விழுந்து சுருண்டார். அப்போது, ரூட்-ம் அருகே ஃபீல்டிங் செய்துக் கொண்டிருந்தார். இதனை குறிப்பிட்டு பேசிய குக், என்னை பற்றிய பேச்சுக்கள் சுற்றிக்கொண்டே தான் இருந்தது. ஆனால் நான் நன்றாக தான் இருந்தேன். அந்த சம்பவத்திற்கு பிறகு தான் எனக்கு 2 குழந்தைகள் பிறந்தது. எனினும் ரூட்டின் நிலைமை எப்படி இருக்கிறது என்பது தெரியவில்லை.

Recommended Video

Ashes Adelaide Oval Test: Players battles to watch | ENG vs AUS | OneIndia Tamil
தோல்வி

தோல்வி

இப்படிப்பட்ட சூழலில் ஜோ ரூட்டை அனைவரும் கிண்டல் அடித்து வருகின்றனர். மேலும் இங்கிலாந்து அணியும் அதற்கேற்றார் போல சொதப்பியுள்ளது. அந்த அணி 180 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்துள்ளதால் தோல்வி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

Story first published: Monday, December 20, 2021, 17:00 [IST]
Other articles published on Dec 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+