For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அலஸ்டர் குக்கின் கடைசி போட்டி.. மரியாதை செலுத்திய இந்திய வீரர்கள்

லண்டன் : அலஸ்டர் குக் தன் கடைசி போட்டியாக இந்தியா, இங்கிலாந்து மோதும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஆடி வருகிறார்.

நேற்று, அவர் பேட்டிங் செய்ய வந்த போது இந்திய வீரர்கள் அவருக்கு மரியாதை செலுத்தினர். கடந்த நான்கு போட்டிகளாக ரன் அடிக்க திணறி வந்த குக் நேற்று சிறப்பாக பேட்டிங் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டி அலஸ்டர் குக்கின் 161வது போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது. சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற உள்ள குக், இங்கிலாந்து உள்ளூர் போட்டிகளில் எசக்ஸ் அணிக்காக சில காலம் விளையாடுவார்.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன்

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன்

இங்கிலாந்து தொடரை கைப்பற்றிய நிலையில், அலஸ்டர் குக்கின் கடைசி போட்டியில் வெல்ல வேண்டும் என்ற லட்சியத்தோடு ஆட வந்தது. ஜோ ரூட் நேற்று டாஸ் வென்றார். அவர் பேட்டிங் தேர்வு செய்த உடன், இங்கிலாந்தின் நீண்ட கால துவக்க வீரரான அலஸ்டர் குக், மற்றொரு துவக்க வீரர் ஜென்னிங்க்ஸ் உடன் தன் கடைசி போட்டியில் களம் காண வந்தார்.

இந்திய வீரர்கள் மரியாதை

அலஸ்டர் குக்குக்கு மரியாதை அளிக்கும் வகையில் இந்திய வீரர்கள் இருபுறமும் நின்று கொண்டு அவர் நடந்து வந்த போது கைதட்டி உற்சாகம் அளித்தனர். இந்திய கேப்டன் கோலி கைகுலுக்கி, அவருக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அதே சமயம், குக் அறையில் இருந்து வெளிப்பட்ட உடன் இங்கிலாந்து ரசிகர்கள் பெரிய அளவில் உற்சாகக் குரல் கொடுத்தனர்.

அலஸ்டர் குக் பேட்டிங் சாதனை

அலஸ்டர் குக் பேட்டிங் சாதனை

குக் இதுவரை 161 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 12,254 ரன்கள் குவித்து இருக்கிறார். இதில் 32 சதம், 56 அரை சதம் அடங்கும். அவரது பல சாதனைகள் இந்தியாவிற்கு எதிரானது என்பது குறிப்பிடத்தக்கது. அவரது அதிகபட்ச ரன்களான 294 ரன்களை இந்தியாவிற்கு எதிராக 2011இல் அடித்திருந்தார்.

குக் இந்தியாவில் பெற்ற வெற்றி

குக் இந்தியாவில் பெற்ற வெற்றி

2012இல் குக் கேப்டனாக இந்தியா வந்த போது டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றி சாதனை படைத்தார். இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்திய பெருமையை பெற்றார். அந்த தொடரில் மூன்று சதம் அடித்து இங்கிலாந்தின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக இருந்தார்.

Story first published: Saturday, September 8, 2018, 11:12 [IST]
Other articles published on Sep 8, 2018
English summary
Alastair Cook received guard of honour welcome by Indian squad for his last match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X