Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திட்டமிட்ட சூழ்ச்சி.. கோலி அப்படி நடந்து கொண்டது சந்தேகம் அளிக்கிறது.. புயலை கிளப்பிய கூக்.. பின்னணி

சென்னை: இந்திய அணியின் கேப்டன் கோலி குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கூக் இது தொடர்பாக பேட்டி அளித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய இந்திய அணி தற்போது சென்னையில் படுதோல்வி அடைந்துள்ளது. இதில் கோலியின் கேப்டன்சி பெரிய அளவில் நம்பிக்கை அளிக்கும் அளவிற்கு இல்லை.

227 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்தி உள்ளது. இதனால் மீதம் உள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

இங்கிலாந்து

இங்கிலாந்து

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கூக் இது தொடர்பாக பேட்டி அளித்துள்ளார். இந்திய அணியில் முதல் இன்னிங்சில் கோலி கொஞ்சம் திணறினாலும். இரண்டாவது இன்னிங்சில் வேகமாக மீண்டு வந்தார். இதனால் அவர் பார்மிற்கு வந்துள்ளார்.

கோலி

கோலி

கோலி கண்டிப்பாக இனி வரும் ஆட்டங்களில் இன்னும் அதிக ரன்களை எடுப்பார் என்று நம்பலாம். இதேபோல் இனி அடுத்தடுத்த போட்டிகளில் அதிரடியாக ஆடுவார். இங்கிலாந்து அணி இதற்கு தயாராக இருக்க வேண்டும்.

கூக் பேட்டி

கூக் பேட்டி

கோலி முதல் டெஸ்டில் தனது வீரர்களிடம் மிகவும் கனிவுடன் நடந்து கொண்டார். களத்திலும் மிகவும் அன்பாக இருந்தார். வீரர்கள் இப்படிப்பட்ட சூழ்நிலையை விரும்புவதால் கோலி அப்படி நினைத்து இருக்கலாம். ரஹானேவிற்கு கீழ் வீரர்கள் சுதந்திரமாக இருந்தது.

அமைதியாக இருந்தார்

அமைதியாக இருந்தார்

இதனால் கோலி வேண்டுமென்றே அமைதியாக செயல்பட்டது போல இருந்தது. வீரர்களிடம் மிகவும் மென்மையாக அவர் திட்டமிட்டு நடந்து கொண்டார். ரஹானே போல செயல்பட கோலி விரும்பினார். ஆனால் அவருக்கு இது செட்டாகவில்லை.

தோல்வி காரணம்

தோல்வி காரணம்

இந்திய அணி தோல்வி அடைய கூட இதுதான் காரணம். அவரின் இயற்கையான குணம் இது கிடையாது. கோலி தன்னுடைய கேப்டன்சி ஸ்டைலை இழந்துவிட்டு ஆடியது போல இருந்தது. கோலி இதை மாற்றிக்கொண்டு மீண்டும் பழைய ஸ்டைலில் ஆட வேண்டும், என்று கூக் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதே கருத்து

இதே கருத்து

கோலி குறித்து இன்னும் சிலர் இதே கருத்தை கூறியுள்ளனர். கோலி தனது ஸ்டைலை மாற்றிவிட்டார். அவரின் கேப்டன்சியை பறிக்க சூழ்ச்சி நடக்கிறது. ஆகவே தனது கேப்டன்சி போக கூடாது என்று சாப்ட்டாக மாறிவிட்டார். இதுதான் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக மாறியுள்ளது என்று கூறுகிறார்கள்.

Story first published: Friday, February 12, 2021, 22:47 [IST]
Other articles published on Feb 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+