Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்படி எப்படி பேசலாம்.. முஸ்தபா கமால் மீது ஐசிசி அதிருப்தி! அம்பயர் தீர்ப்பை ஏற்க 'குட்டு'!!

துபாய்: ரோகித் ஷர்மாவுக்கு நோ-பால் வீசப்பட்டதாக அம்பயர் அலீம்தார் அறிவித்ததை ஐசிசி தலைவர் விமர்சனம் செய்திருக்க கூடாது, இது துரதிருஷ்டவசமானது என்று ஐசிசி தலைமை செயல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து ஐசிசி தலைமை செயல் அதிகாரி, டேவிட் ரிச்சட்ர்சன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நடுவர் அலீம்தார் நோ-பால் என்று அறிவித்த அந்த குறிப்பிட்ட பந்தை, சிலர் நோ-பால் இல்லை என்கின்றனர். ஆனால், அதை ஆய்வு செய்து பார்த்தபோது, 50-50 வாய்ப்பு இருந்தது தெரியவந்தது. நோ-பால் என்றும் கூறலாம், அல்லது நல்லபால் என்றும் அதை கூற முடியும்.

Aleem Dar's no-ball decision '50-50 call', Kamal's comments 'unfortunate': ICC

எனவே இந்த விஷயத்தில் அலீம்தாரை விமர்சனம் செய்வது விரும்பத் தக்கது இல்லை. ஐசிசி தலைவர் முஸ்தபா கமால், ஐசிசி குறித்து கூறிய சர்ச்சைக்குறிய கருத்து தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். அம்பயர் எடுக்கும் முடிவே இறுதியானது. அதை அனைவரும் மதிக்க வேண்டும். உள்நோக்கத்துடன், ஐசிசி நடந்துகொள்வதாக முஸ்தபா கமால் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Story first published: Friday, March 20, 2015, 15:43 [IST]
Other articles published on Mar 20, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+