Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சலூனில் காசு கொடுக்காமல் அபேசாகி ஆஷஸ் விளையாட வந்த ஆஸ்திரேலிய வீரர்.. பார்பர் கொடுத்த டெட்-லைன்!

லீட்ஸ்: இங்கிலாந்தில் உள்ள சலூன் கடை ஒன்றில் முடியை திருத்தம் செய்துகொண்ட ஆஸ்திரேலிய அலெக்ஸ் கேரி பணம் கொடுக்காமல் சென்றதால் கோபமடைந்த கடைக்காரர், திங்கட் கிழமைக்குள் அலெக்ஸ் கேரி பணத்தை கொடுக்க வேண்டும் என்று கெடு விதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 3வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 2வது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி இங்கிலாந்து அணியின் பேர்ஸ்டோவை ஸ்டம்பிங் செய்தார். விதிகளின்படியே ஸ்டம்பிங் செய்திருந்தாலும், இங்கிலாந்து வீரர்கள் மற்றும் ரசிகர்கள் ஆட்சேபணை தெரிவித்து வருகின்றனர்.

Alex Carey leaves without paying money for a haircut and Barber gave a Deadline to pay

இதனால் இங்கிலாந்து பத்திரிகைகளும் ஸ்பிரிட் ஆப் தி கிரிக்கெட் என்று எழுத, விவகாரம் இரு நாட்டு பிரதமர்கள் வரை சென்றது. இந்த சர்ச்சையே ஓயாத நிலையில், அலெக்ஸ் கேரில் இன்னொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இங்கிலாந்தில் உள்ள சலூன் கடையில் முடியை திருத்தம் செய்து கொள்பதற்காக மார்னஸ் லபுஷேன், டேவிட் வார்னர், அலெக்ஸ் கேரி மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் சென்றுள்ளனர்.

கடை மூடப்படும் நேரத்தில் சென்ற ஆஸ்திரேலிய வீரர்கள் சென்றாலும், சலூன் கடை உரிமையாளர் ஆடம் மஹ்மூத் அவர்களுக்கு முடிதிருத்தம் செய்துள்ளார். இதையடுத்து வீரர்கள் அனைவரும் கார்டுகளை கொடுத்த நிலையில், அந்தக் கடையில் பணம் மட்டுமே வாங்கப்படும் என்று உரிமையாளர் கூறியுள்ளார். இதன்பின்னர் லபுஷேன், கவாஜா மற்றும் வார்னர் ஆகியோர் பணம் கொடுத்துள்ளனர்.

அலெக்ஸ் கேரி மட்டும் ஹோட்டலுக்கு சென்றுவிட்டு, உடனடியாக பணத்தை அனுப்புவதாக கூறியுள்ளார். ஆனால் ஹோட்டலுக்கு சென்ற அலெக்ஸ் கேரி 30 யூரோ பணத்தை கொடுக்கவில்லை என்று சலூன் கடை உரிமையாளர் ஆடம் கூறியுள்ளார். இந்த நிலையில் திங்கட் கிழமைக்குள் பணத்தை கொடுக்க வேண்டும் என்று கடை உரிமையாளர் ஆடம் கெடு விதித்துள்ளார்.

Story first published: Saturday, July 8, 2023, 15:32 [IST]
Other articles published on Jul 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+