Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனிகிட்ட இருந்து அந்த கலையை கத்துக்கணும்.. அவரை மாதிரியே ஆடணும்.. மனம் திறந்த ஆஸி. வீரர்!

மும்பை : ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி தோனி போல தானும் ஒரு சிறந்த பினிஷர் ஆக வேண்டும் என பேட்டியில் கூறி இருக்கிறார்.

கடந்த 2019 உலகக்கோப்பை தொடரில் அலெக்ஸ் கேரி ஆஸ்திரேலிய அணியின் சிறந்த பினிஷராக விளங்கினார். அப்போது முதல் அதிக கவனம் பெற்று வருகிறார் அவர்.

அவர் உலகின் சிறந்த பினிஷரான தோனியிடம் இருந்து போட்டிகளை பினிஷிங் செய்வதை தான் கற்றுக் கொண்டு, அவரைப் போல ஒருநாள் ஆட வேண்டும் என கூறி இருக்கிறார்.

ஒருநாள் தொடர்

ஒருநாள் தொடர்

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மும்பையில் செவ்வாய்கிழமை முதல் துவங்க உள்ளது. இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் அலெக்ஸ் கேரியும் இடம் பெற்றுள்ளார்.

தனி இடம் பிடித்தார்

தனி இடம் பிடித்தார்

டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களாக இருந்தாலும், இளம் வீரர் அலெக்ஸ் கேரி தனக்கென ஒரு இடத்தை லோயர் மிடில் ஆர்டரில் பிடித்துள்ளார்.

ரன்கள் குவித்த கேரி

ரன்கள் குவித்த கேரி

2019 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியில் அதிக ரன்கள் அடித்த வீரர்களில் இரண்டாம் இடம் பிடித்தார் அலெக்ஸ் கேரி. இத்தனைக்கும் அவர் லோயர் மிடில் ஆர்டரில் தான் பேட்டிங் செய்து வந்தார்.

அணியை மீட்ட கேரி

அணியை மீட்ட கேரி

ஆஸ்திரேலிய அணி சில போட்டிகளில் விக்கெட்களை விரைவாக இழந்து தவித்த போது, பின்வரிசை வீரர்களுடன் ஜோடி போட்டு அணியை மீட்டார் அலெக்ஸ் கேரி. அப்போதே உலகின் அடுத்த சிறந்த பினிஷர் உருவாகிறார் என்ற பாராட்டுக்களை பெற்றார் அவர்.

ஒற்றுமைகள் உள்ளன

ஒற்றுமைகள் உள்ளன

தோனிக்கும், அவருக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. இருவருமே விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன்கள் தான். அதிலும், இருவரும் லோயர் மிடில் ஆர்டரில் இறங்கி அணியைக் காப்பாற்றி, போட்டியை வெற்றிகரமாக முடிக்கும் பணியை செய்து இருக்கிறார்கள்.

அலெக்ஸ் கேரி என்ன சொன்னார்?

அலெக்ஸ் கேரி என்ன சொன்னார்?

இந்த நிலையில், அவர் தோனியைத் தான் பின்பற்றி வருகிறார் என்பது அவர் அளித்த பேட்டி மூலம் தெரிய வந்துள்ளது. ஒருநாள் தொடருக்கு முன் பேட்டி அளித்த அவர், தோனியிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி பேசினார்.

முன்னேற வேண்டும்

முன்னேற வேண்டும்

"நான் என் ஆட்டத்தில் நிறைய இடங்களில் முன்னேற வேண்டும் என நினைக்கிறேன். நான் பெரும்பாலும் மிடில் ஆர்டர் முதல் லோயர் ஆர்டர் வரை தான் பேட்டிங் செய்வேன்." என்று அணியில் தன் நிலையைப் பற்றி கூறினார் அலெக்ஸ் கேரி.

தோனி போன்ற சிறந்த வீரர்

தோனி போன்ற சிறந்த வீரர்

மேலும், "நான் ஆஸ்திரேலிய அணிக்காக போட்டிகளை வெற்றிகரமாக முடிக்க நினைக்கிறேன். தோனி போன்ற ஒரு உலகின் சிறந்த வீரரை காணும் போது அவரிடம் இருந்து முடிந்த வரை கற்றுக் கொள்ள விரும்புவோம்" என்றார்.

அவரைப் போல செய்ய வேண்டும்

அவரைப் போல செய்ய வேண்டும்

"கடந்த வருடம் அவருடன் ஆடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என் அதிர்ஷ்டம். அவர் போட்டிகளை அதன் ஆழத்துக்கு எடுத்துச் சென்று இந்தியாவுக்காக பினிஷ் செய்கிறார். நானும் அதே போல ஒருநாள் செய்ய வேண்டும் என விரும்புகிறேன்" என்றார் அலெக்ஸ் கேரி.

மனம் திறந்த பேட்டி

மனம் திறந்த பேட்டி

தோனி நீண்ட காலமாக கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி இருக்கும் நிலையில், அலெக்ஸ் கேரியின் இந்த மனம் திறந்த பேட்டி அவரது ரசிகர்களை குஷிப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

Story first published: Monday, January 13, 2020, 19:12 [IST]
Other articles published on Jan 13, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+