For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 வரலாற்றிலேயே மாபெரும் சாதனை.. 2000 பவுண்டரி.. இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடி

துபாய்: இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் மாபெரும் டி20 சாதனையை செய்து இருக்கிறார். உலகிலேயே 2000 பவுண்டரிகளை அடித்த இரண்டாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார். இதற்கு முன் கிறிஸ் கெயில் மட்டுமே டி20 போட்டிகளில் 2000-க்கும் அதிகமான பவுண்டரிகளை அடித்த வீரராக இருந்தார்.

2025 இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரில் அலெக்ஸ் ஹேல்ஸ் விளையாடி வருகிறார். அந்தத் தொடரில் அலெக்ஸ் ஹேல்ஸ் டெசர்ட் வைப்பர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று நடந்த போட்டியில் துபாய் கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக டெஸர்ட் வைப்பர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

Alex Hales is the second batter to cross 2000 boundaries in 20 cricket

அப்போது அலெக்ஸ் ஹேல்ஸ் துவக்க வீரராக இறங்கி 31 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார். இரண்டு ஃபோர் மற்றும் இரண்டு சிக்ஸ் அடித்து இருந்தார். இந்த போட்டிக்கு முன் அவர் 1459 ஃபோர் மற்றும் 538 சிக்ஸர்களை அடித்து இருந்தார். மொத்தமாக 1997 பவுண்டரிகளை அடித்து இருந்தார்.

இந்த போட்டியில் நான்கு பவுண்டரிகளை அடித்ததன் மூலம் 2000 பவுண்டரிகள் என்ற மைல்கல்லை கடந்தார். இந்தப் போட்டியில் அலெக்ஸ் ஹேல்ஸ் அணி தோல்வி அடைந்தது. ஆனால், அவர் டி20 கிரிக்கெட்டில் இந்த இமாலய சாதனையை படைத்து இருக்கிறார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில் 2188 பவுண்டரிகளை அடித்து டி20 போட்டிகளில் அதிக பவுண்டரிகளை அடித்த வீரராக இருக்கிறார். அவர் 1132 ஃபோர் மற்றும் 156 சிக்ஸர்களை அடித்து இருக்கிறார்.

இரண்டாவது இடத்தில் இருக்கும் அலெக்ஸ் ஹேல்ஸ் 2001 பவுண்டரிகளை அடித்து இருக்கிறார். 1461 ஃபோர் மற்றும் 540 சிக்ஸர்களை அடித்து இருக்கிறார் அலெக்ஸ் ஹேல்ஸ். மூன்றாவது இடத்தில் டேவிட் வார்னர் இருக்கிறார். அவர் 1746 பவுண்டரிகளை அடித்து இருக்கிறார். 1287 ஃபோர் மற்றும் 459 சிக்ஸர்களை அடித்து இருக்கிறார் டேவிட் வார்னர்.

டி20 கிரிக்கெட்டில் அதிக பவுண்டரி அடித்த வீரர்கள் பட்டியல் -

கிறிஸ் கெயில் - 2,188 (1132 ஃபோர், 1056 சிக்ஸர்கள்)
அலெக்ஸ் ஹேல்ஸ் - 2,001 (1461 ஃபோர், 540 சிக்ஸர்கள்)
டேவிட் வார்னர் - 1,746 (1,287 ஃபோர், 459 சிக்ஸர்கள்)
ஜோஸ் பட்லர் - 1,591 (1082 ஃபோர், 509 சிக்ஸர்கள்)
ஜேம்ஸ் வின்ஸ் - 1,571 (1276 ஃபோர், 295 சிக்ஸர்கள்)
விராட் கோலி - 1560 (1144 ஃபோர், 416 சிக்ஸர்கள்)
ஆரோன் பின்ச் - 1,547 (1095 ஃபோர், 452 சிக்ஸர்கள்)

அலெக்ஸ் ஹேல்ஸ் டி20 போட்டிகளில் அதிக ஃபோர் அடித்த வீரர் என்ற சாதனையையும் நீண்ட காலமாக தக்க வைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, January 22, 2025, 7:54 [IST]
Other articles published on Jan 22, 2025
English summary
Alex Hales is the second batter to cross 2000 boundaries in டி20 cricket
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+