கோலி வேற்று கிரகத்தை சேர்ந்தவர்.. என்னமா வித்தியாசமா ஆடுறார்..பாராட்டும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்
லண்டன் : இங்கிலாந்து அணி வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், கோலி பற்றி கூறியிருக்கிறார். கோலி முற்றிலும் வேற்று கிரகத்தில் இருந்து வந்தவர் போல ஆடுகிறார் என கூறி இருக்கிறார் அலெக்ஸ் ஹேல்ஸ்.
அலெக்ஸ் ஹேல்ஸ் குறைந்த ஓவர் போட்டிகள் நிபுணர் என பெயர் பெற்றவர். தொடர்ந்து இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இடம் பிடித்து வருகிறார்.
2௦14ஆம் ஆண்டு டி20 பேட்டிங் தரவரிசையில் முதல் இடம் பிடித்தார். இதுவரை மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் 132 போட்டிகள் ஆடி 4476 ரன்கள் வரை குவித்து இருக்கிறார்.

கோலி வேற்று கிரகத்தை சேர்ந்தவர்
அலெக்ஸ் ஹேல்ஸ், விராட் கோலி பற்றி கூறுகையில், "கோலி இப்போது முழுவதும் வேறு கிரகத்தை சேர்ந்தவர் போல இருக்கிறார். இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளில் முற்றிலும் வேறு மாதிரி ஆடுகிறார். இங்கிலாந்தின் பேட்டிங் ஆட கடுமையான ஆடுகளங்களில் கூட எளிதாக ரன் குவிக்கிறார்" என கூறினார்.

ஜோ ரூட்டும் சும்மா இல்லை
அதே சமயம், தன் அணியின் சிறந்த பேட்ஸ்மேன் என பெயர் பெற்ற ஜோ ரூட்டையும் விட்டுக் கொடுக்கவில்லை. ஜோ ரூட் பற்றி கூறுகையில், "அவர் 19 வயது இருந்த போதே இங்கிலாந்தின் சிறந்த வீரராக வருவார் என தெரியும். இப்போது அவருக்கு 27 வயது தான் ஆகிறது. இன்னும் 10 ஆண்டுகள் வரை அவர் ஆடுவார். இங்கிலாந்தின் பல சாதனைகளை அவர் முறியடிப்பார்" என கூறினார்.

கோலி இதுவரை
கோலி இதுவரை 3 விதமான கிரிக்கெட்டிலும், 343 சர்வதேச போட்டிகளில் ஆடி 17,979 ரன்கள் குவித்து உள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார் கோலி.

ஜோ ரூட் இதுவரை
ஜோ ரூட் அனைத்து வித கிரிக்கெட்டிலும் 217 போட்டிகள் ஆடி 11741 ரன்கள் குவித்து இருக்கிறார். டெஸ்ட் தரவரிசையில் ஐந்தாம் இடத்திலும், ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் மூன்றாம் இடத்திலும் இருக்கிறார் ஜோ ரூட்.


Click it and Unblock the Notifications