Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இப்படி சொல்றது வெட்கக்கேடான ஒன்று”.. ராகுல் டிராவிட்டின் விளக்கம்.. இங்கி, வீரர் கடும் விமர்சனம்!

மெல்பேர்ன்: இந்திய அணியின் தோல்வி குறித்து ராகுல் டிராவிட் அளித்த விளக்கம் வெட்கக்கேடானது என இங்கிலாந்து வீரர் மோசமாக விமர்சித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப்போட்டி முடிவடைந்து 3 நாட்களை கடந்த போதும், இந்திய அணி மீதான விமர்சனங்கள் மட்டும் இன்னும் குறைந்தப்பாடில்லை.

இந்திய அணியால் ஏன் இங்கிலாந்துக்கு எதிராக சோபிக்க முடியவில்லை, எதிர்காலத்தில் கோப்பையை வெல்ல என்ன மாற்றங்களை செய்யவேண்டும் என்ற விவாதங்களும் எழுந்துள்ளன.

காரணங்கள் என்ன

காரணங்கள் என்ன

இதில் மிகவும் முக்கியமான ஒன்று அயல்நாட்டு தொடர்களில் இந்திய வீரர்கள் பங்கேற்பது. இந்திய களங்களில் மட்டும் சிறப்பாக ஆடும் இந்திய அணி வீரர்கள், அயல்நாட்டு களங்களை புரிந்துக்கொள்ள முடியாமல் திணறுகின்றனர். எனவே அவர்களை பிபிஎல் போன்ற அயல்நாட்டு தொடர்களிலும் விளையாட வைக்க வேண்டுமா? என டிராவிட்டிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

டிராவிட்டின் விளக்கம்

டிராவிட்டின் விளக்கம்

இதற்கு பதலளித்த டிராவிட், அயல்நாட்டின் தொடர்களில் விளையாடினால் இந்திய வீரர்களுக்கு பெரும் உதவிதான். ஆனால் அந்த தொடர்கள், சரியாக இந்தியாவின் உள்நாட்டு தொடர்களின் சமயத்தில் நடைபெறுகின்றன. ஒருவேளை இந்திய வீரர்கள் அங்கு பங்கேற்க சென்றால் இந்தியாவின் ரஞ்சிக்கோப்பை, சையது முஷ்டக் அலி போன்றவை ரத்தாகும். அதாவது எங்கள் டெஸ்ட் அழிந்துவிடும் என கூறினார்.

அலெக்ஸ் ஹேல்ஸ்

அலெக்ஸ் ஹேல்ஸ்

இந்நிலையில் இதனை இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், அயல்நாட்டு தொடர்களில் இந்திய வீரர்கள் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை எனக்கூறுவது வெட்கக்கேடான ஒன்று. அயல்நாட்டு தொடர்களில் விளையாடுவது அனைவருக்குமே நல்லதாகும். உலகின் தலைசிறந்த வீரர்களை உருவாக்கலாம்.

நம்பிக்கை உள்ளது

நம்பிக்கை உள்ளது

ஒவ்வொரு முறையும் அயல்நாட்டு களங்களில் விளையாடும்போதும், நிறைய அனுபவங்கள் கிடைக்கும். இனி வரும் நாட்களிலாவது இந்திய வீரர்கள் வேறு தொடர்களிலும் விளையாடுவார்கள் என நம்புகிறேன். பொறுத்திருந்து அதனை பார்ப்போம்.

Story first published: Sunday, November 13, 2022, 13:52 [IST]
Other articles published on Nov 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+