Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜெயிலுக்கு போக வேண்டிய பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்..! நீதிமன்றம் பிறப்பித்த எஸ்கேப் உத்தரவு

Recommended Video

இந்திய வீரர் முகமது ஷமி கைதாக வாய்ப்பு ?

கொல்கத்தா: பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீதான கைது வாரண்ட்டை நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான் 2018ம் ஆண்டு ஷமி மீதும் அவரது குடும்பத்தார் மீது பல்வேறு புகார்களை போலீஸில் அளித்துள்ளார். ஷமி மூத்த சகோதரர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் என்றும் கொலை செய்ய முயன்றார் என்றும் புகார் தெரிவித்திருந்தார்.

முகமது ஷமிக்கு பல்வேறு பெண்களிடம் தொடர்பு இருப்பதாக அவர் புகார் அளித்துள்ளார். புகாரையடுத்து பிசிசிஐ விசாரணை மேற்கொண்டு, தற்காலிகமாக ஊதிய ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது.

கைது வாரண்ட்

கைது வாரண்ட்

பின்னர் மேல் விசாரணையில் எந்த குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகாதததால் மீண்டும் ஊதிய ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்த வழக்கு, கடந்த 2ம் தேதி மீண்டும் விசாரணைக்க வந்தது. அப்போது, ஷமி மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

சரணடைய உத்தரவு

சரணடைய உத்தரவு

ஆனால், ஷமி வெளிநாட்டில் இருப்பதால் 15 நாட்களில் நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. மேலும், அவரது சகோதரரை உடனடியாக கைது செய்ய போலீசாருக்கு கொல்கத்தா உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது.

கைது நிறுத்தம்

கைது நிறுத்தம்

இந் நிலையில், கைது வாரண்ட்டை அலிபூர் நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இது குறித்து ஷமியின் வழக்கறிஞர் சலீம் ரகுமான் கூறி இருப்பதாவது:

நவம்பர் 2ல் விசாரணை

நவம்பர் 2ல் விசாரணை

ஷமி மீதான கைது வாரண்டுக்கு அலிபூர் நீதிமன்றம் 2 மாத காலத்துக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. அத்துடன் வழக்கு விசாரணை நவம்பர் 2ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார். எனவே, கைது நடவடிக்கையில் இருந்து தற்காலிகமாக தப்பித்துள்ளார் ஷமி.

Story first published: Tuesday, September 10, 2019, 14:29 [IST]
Other articles published on Sep 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+