Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீங்கள் அழகாக இல்லை என கேலி செய்த ரசிகர்…! டுவிட்டரில் ஸ்மார்ட் பதில் தந்த இளம் வீரர்…!

லண்டன்: அழகாக இல்லை என்று விமர்சித்தவருக்கு அளித்துள்ள பதிலால் அனைவரது பாராட்டையும் பெற்றிருக்கிறார் இங்கிலாந்தின் இளம் பவுலர் ஜோப்ரா ஆர்ச்சர்.

பல துறைகளில் பிரபலம் அடைந்தவர்கள், சமூக வலை தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கின்றனர். பிரபல கிரிக்கெட் முன்னாள் வீரரான சோயிப் அக்தர் யு டியூப் சேனல் தொடங்கி அதில் பிசியாக இருக்கிறார்.

அந்த வகையில், இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் புதிதாக யூ டியூப் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளார். ஜோப்ரா ஆர்ச்சர், இங்கிலாந்தின் இளம் வேகப்பந்துவீச்சாளர். வெஸ்ட் இண்டீசின் மைந்தரான ஆர்ச்சர், இங்கிலாந்துக்காக விளையாடிவருகிறார்.

ரசிகர்கள் பட்டாளம்

ரசிகர்கள் பட்டாளம்

பார்படாஸில் பிறந்த ஆர்ச்சர், தற்போது வசிப்பது இங்கிலாந்தில். உலக கோப்பையின் மூலம் ரசிகர்கள் பட்டாளம் அவருக்கு அதிகம். அவரது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்கள்அதிகம்.

வீடியோக்கள் வெளியீடு

வீடியோக்கள் வெளியீடு

அந்த டுவிட்டரில், தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது, கால் பந்தாட்டம் விளையாடுவது போன்ற வீடியோக்களை பகிர்ந்துள்ளார். கிரிக்கெட்டை தாண்டி, கால்பந்து, வீடியோ கேம்ஸ் போன்ற வற்றிலும் அதிக ஆர்வமுடையவர்.

வாழ்த்தும் ரசிகர்கள்

வாழ்த்தும் ரசிகர்கள்

இந் நிலையில் ஆர்ச்சர் புதிதாக யூ டியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார். கால்பந்து விளையாடுவது, கிரிக்கெட்டில் தனது மகிழ்வான தருணங்கள், வீடியோ கேம்ஸ் ஆடுவது, இயற்கையுடன் உலாவுவது, கார் பயணங்கள் இதனை எல்லாம் எடிட் செய்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு நிறைய பேர் வாழ்த்து கூறியுள்ளனர்.

கமெண்ட் பதிவு

அதில் ஒருவர் மட்டும் ஆர்ச்சரைப் பார்த்து, வித்தியாசமான கமெண்ட் ஒன்றை பதிவு செய்திருந்தார். நீங்கள் அழகாக இல்லை என்று அவர் பதிவிட்டிருந்தார். அந்த நபர் எதற்காக அப்படி கமென்ட் செய்தார் என்று தெரியவில்லை.

அழகான பதில்

அழகான பதில்

ஆனால், ஆர்ச்சர் அடித்த பதில் தான், அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. ஆனால், நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என பதில் கமென்ட் அடித்து அசரடித்தார். இதனை ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார். ஆர்ச்சர், உங்களின் சிறப்பு என்று பதில் கூறியிருக்கின்றனர்.

Story first published: Sunday, August 11, 2019, 17:36 [IST]
Other articles published on Aug 11, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+