Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டிரெஸ்ஸிங் ரூம் களேபரம்.. 2 பேர் மீது பழி போட்ட கோலி.. பாவமாக உட்கார்ந்திருந்த வீரர்.பகீர் பின்னணி

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான தோல்வி காரணமாக இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூமே கொஞ்சம் களேபரமாக நேற்று இருந்துள்ளது. சில வீரர்கள் மீது கோலி வைத்த புகார் காரணமாக அணிக்குள் நேற்று பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டு இருக்கிறது.

சென்னையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பரிதாப தோல்வி அடைந்தது. நல்ல அணியை தேர்வு செய்தும் கூட இந்திய அணியால் வெற்றிபெற முடியவில்லை.

அதிலும் சென்னை பிட்சில் 22 வருடங்களுக்கு பிறகு தோல்வியை தழுவி இந்திய அணி பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இங்கிலாந்து

இங்கிலாந்து

இங்கிலாந்து அணிக்கு எதிரான தோல்வி காரணமாக இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூமே கொஞ்சம் களேபரமாக நேற்று இருந்துள்ளது. போட்டிக்கு பின் கோலி கொடுத்த பேட்டி இந்த மோதலுக்கு காரணமாக அமைந்துள்ளது. நேற்று தோல்விக்கு பின் கோலி நேற்று வெளிப்படையாக புகார் அளித்தார். சில வீரர்கள் மீது கோலி வைத்த புகார் காரணமாக அணிக்குள் நேற்று பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டு இருக்கிறது.

நேற்று

நேற்று

நேற்று போட்டிக்கு பின்பாக பேசிய கோலி இந்திய அணியில் சுப்மான் கில் மட்டுமே நன்றாக பேட்டிங் செய்தார். அஸ்வின் மற்றும் ஸ்பீட் பவுலர்கள் நன்றாக வீசினார்கள். நான்காவது மற்றும் ஐந்தாவது ஸ்பின் பவுலர்கள் சரியாக செயல்படவில்லை. தொடக்க வீரர்கள் சொதப்பினார்கள் என்று குற்றச்சாட்டு வைத்தார்.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

ரோஹித் சர்மா, ரஹானேவின் பேட்டிங்கையும், நதீம், சுந்தர் ஆகியோரின் பவுலிங்கையும் கோலி இப்படி குற்றஞ்சாட்டி இருந்தார். நதீமிருக்கு தேவையின்றி வாய்ப்பு கொடுத்ததே கோலிதான். கடைசியில் அவரையே கோலி குற்றஞ்சாட்டியது பெரிய சர்ச்சையானது. கோலி இப்படி தோல்விக்கான காரணத்தை பிறர் மீது சுமத்தியது பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.

பதற்றம்

பதற்றம்

இதனால் நேற்று போட்டிக்கு பின் டிரெஸ்ஸிங் ரூமில் வீரர்கள் மகிழ்ச்சியாக இல்லை. கொஞ்சம் பதற்றத்துடனும் கவலையுடனும் வீரர்கள் காணப்பட்டுள்ளனர் . ரஹானேவிற்கு கீழ் நிம்மதியாக இருந்தது போல வீரர்கள் அவ்வளவு நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இல்லை என்று கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் வேறு ஒரு வீரரும் வருத்தத்தில் இருந்துள்ளார்.

குல்தீப்

குல்தீப்

இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத வருத்தத்தில் குல்தீப் இருந்துள்ளார். அதோடு குல்தீப் யாதவை எடுக்காமல் போனது சரிதான். அவரின் ஸ்பின் பவுலிங்கில் வித்தியாசம் இருக்காது என்று கோலி தனது முடிவை நியாயப்படுத்தியதும் கூட சர்ச்சையாகி உள்ளது. நம்மை அணியில் எடுக்கவில்லை.. அதோடு இப்படி விமர்சனமும் செய்கிறாரே என்று குல்தீப் வருத்தத்தில் இருந்துள்ளார்.

சோகம்

சோகம்

நேற்று பெவிலியனில் இவர் சோகமாக உட்கார்ந்து இருந்த காட்சிகள் பெரிய அளவில் வைரலானது. இந்திய அணி முதல் டெஸ்ட் தோல்வி காரணமாக பெரிய மனவருத்தத்தில் இருக்கிறது. இதில் இருந்து வேகமாக மீண்டு வர வேண்டும் என்று இந்திய அணி திட்டமிட்டுக்கொண்டு இருக்கிறது.

Story first published: Wednesday, February 10, 2021, 16:10 [IST]
Other articles published on Feb 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+