Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆல் ஸ்டார் கிரிக்கெட்... சச்சின் அணியில் 4 இந்தியர்கள்.. வார்னே அணியில் அஜீத் அகர்கர்

நியூயார்க்: ஆல் ஸ்டார் கிரிக்கெட் தொடருக்கான இரு அணிகளையும் சச்சின் டெண்டுல்கரும், ஷான் வார்னேவும் அறிவித்துள்ளனர். நியூயார்க்கில் இரு அணிகளும் அறிவிக்கப்பட்டன.

இதில் சச்சின் தலைமையிலான சச்சின் பிளாஸ்டர்ஸ் அணியில் 4 இந்தியர்கள் உள்பட 15 பேர் இடம் பெற்றுள்ளனர். வார்னே தலைமையிலான அணியில் 14 பேர் இடம் பெறுகிறார்கள். அதில் ஒரே ஒரு இந்தியராக அஜீத் அகர்கர் இடம் பெற்றுள்ளார்.

நியூயார்க் உள்பட 3 அமெரிக்க நகரங்களில் இந்த இரு அணிகளும் 3 டுவென்டி 20 கிரிக்கெட் போட்டிகளில் ஆடவுள்ளன. முதல் போட்டி நவம்பர் 7ம் தேதி நியூயார்க்கில் நடைபெறும்.

டிரா

டிரா

நேற்று நியூயார்க்கில் கூடி இரு அணிகளின் வீரர்களும் தேர்வு செய்யப்பட்டனர். குலுக்கல் முறையில் அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் சச்சின் அணியில் மொத்தம் 15 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் நால்வர் இந்தியர்கள் ஆவர்.

நான்கு இந்தியத் தலைகள்

நான்கு இந்தியத் தலைகள்

இந்தியாவின் மிகச் சிறந்த நான்கு வீரர்களான சச்சின், ஷேவாக், கங்குலி, லட்சுமண் ஆகியோர் சச்சின் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

அஜீத் அகர்கர்

அஜீத் அகர்கர்

இந்தியாவின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் அஜீத் அகர்கர் வார்னே அணியில் இடம் பிடித்துள்ளார். வார்னே அணியில் 14 பேர் இடம் பெற்றுள்ளனர். வார்னே வாரியர்ஸ் என்பது அந்த அணியின் பெயராகும்.

சச்சின் அணி வீரர்கள்

சச்சின் அணி வீரர்கள்

சச்சின் அணி வீரர்கள் வி்வரம்: சச்சின் (கேப்டன்), ஷேவாக், வி.வி.எஸ். லட்சுமண், பிரையன் லாரா, கங்குலி, மஹளா ஜெயவர்த்தனே, கார்ல் கூப்பர், மொயின் கான், முத்தையா முரளிதரன், கிரீம் ஸ்வான், கர்ட்லி அம்புரோஸ், ஷான் போலாக், கிளன் மெக்கிராத், லான்ஸ் க்ளூஸ்னர், சோயப் அக்தர்.

வார்னே வாரியர்ஸ்

வார்னே வாரியர்ஸ்

ஷேன் வார்னே (கேப்டன்), மாத்யூ ஹெய்டன், மைக்கேல் வாகன், ரிக்கி பான்டிங், ஜான்டி ரோட்ஸ், ஜாக்கஸ் கல்லிஸ், ஆண்ட்ரூ சைமன்ட்ஸ், குமார் சங்கக்கரா, சக்லைன் முஷ்டாக், டேணியல் வெட்டோரி, கர்ட்னி வால்ஷ், வாசிம் அக்ரம், ஆலன் டொனால்ட், அஜீத் அகர்கர்.

Story first published: Friday, November 6, 2015, 10:16 [IST]
Other articles published on Nov 6, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+