Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின்,டிராவிட், தோனி…? பாத்தா மரண பயம்.. தெறிச்சோடினேன்..! ரகசியம் சொன்ன பவுலிங் பிரபலம்..!!

அகமதாபாத்: இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் எதிரணியினருக்கு கடும் சவாலாக விளங்கினர் என்று ஆஸி. முன்னாள் வீரரான பிரட் லீ தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டில் அசுர வேக பவுலிங்கால் அனைத்து பேட்ஸ்மேன்களையும் திணற அடித்தவர் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் பிரெட் லீ. லேசான பெண்மை வாய்ந்த அவரின் புன்னகை ஏக பிரபலம்.

ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கிரிக்கெட் வர்ணனையாளராகவும், சில அணிகளுக்கு பயிற்சியாளராகவும் உள்ளார். இந்நிலையில், இந்தியா வந்திருந்த பிரெட் லீ அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

பெஸ்ட் பவுலர்

பெஸ்ட் பவுலர்

அதில் அவர் பேசியதாவது: இன்றைய கிரிக்கெட் உலகில், பெஸ்ட் பவுலர் என்றால் அது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தான். மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இந்த சகாப்தம்

இந்த சகாப்தம்

பும்ராவை பொறுத்தவரை அவர் இந்த சகாப்தத்தின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராகவும், வேகப்பந்து வீச்சு அரசர்களின் அரசராகவும் திகழ்கிறார். இந்த தலைமுறையின் மிகச்சிறந்த பவுலர் அவர் தான் என்பதை அனைவரும் ஒத்துக் கொண்டு தான் ஆக வேண்டும்.

யாரை பார்த்து பயம்?

யாரை பார்த்து பயம்?

அப்போது நீங்கள் விளையாடிய காலத்தில் யாருடைய பேட்டிங்கை கண்டு பயந்தீர்கள் என்று கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது: சச்சின், விவிஎஸ் லக்ஷ்மன், டிராவிட் மற்றும் தோனி ஆகியோருக்கு பவுலிங் போடுவது என்பது கஷ்டமான விஷயம்.

நல்ல முன்னேற்றம்

நல்ல முன்னேற்றம்

இவர்கள் மட்டுமல்ல. பொதுவாகவே இந்திய அணியில் அப்போது இருந்த பல பேட்ஸ்மென்கள் எனக்கு மரண பயத்தை ஏற்படுத்தினர். இப்போதும் இந்திய அணியில் திறமை வாய்ந்த பேட்ஸ்மென்கள் இருக்கின்றனர். பவுலிங் துறையிலும் வியத்தகு முன்னேற்றம் காணப்படுகிறது என்றார்.

Story first published: Friday, September 6, 2019, 18:52 [IST]
Other articles published on Sep 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+