Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அது எப்படிங்க.. பத்து பேரும் ஒரே மாதிரி டக் அவுட்? இணையத்தை கலக்கும் கேரளா கிரிக்கெட் காமெடி!

மலப்புரம் : கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நடந்த மாவட்ட அளவிலான உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் காசர்கோடு - வயநாடு அண்டர் 19 மகளிர் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் காசர்கோடு அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் பத்து வீராங்கனைகளும் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். இதுவே ஒரு வேடிக்கை தான். ஆனால், இதை இன்னும் காமெடியாக மாற்றியது அந்த பத்து பேரும் பௌல்டு அவுட் ஆனது தான்.

All the Kasaragod Under 19 Girls team members got bowled out and gone for duck

அது எப்படி பத்து பேரும் ஒரே மாதிரி பௌல்டு அவுட்டும் ஆகி, டக் அவுட்டும் ஆக முடியும்? என இணையத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

பத்து விக்கெட் எடுத்த வயநாடு அணி, 4 இதர ரன்களை கொடுத்து, காசர்கோடு அணியின் மானத்தை ஒரளவு காப்பாற்றியது. இல்லையென்றால், அணியின் ஸ்கோரும் "முட்டை"யாக இருந்திருக்கும். இந்த போட்டியில் வயநாடு அணி ஒரே ஓவரில் வெற்றி இலக்கான (?!) 5 ரன்கள் எடுத்து 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த கிரிக்கெட் போட்டியை அரசியலுடன் முடிச்சுப் போட்டு சிலர் காமெடி செய்து வருகிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் வேட்பாளராக நிற்கிறார். அதை வைத்து, சிலர் ராகுல் யோசனையால் வயநாடு பெரும் வெற்றி பெற்றது என சம்பந்தமே இல்லாமல் கூறி வருகிறார்கள்.

இந்தப் காமெடி கிரிக்கெட் போட்டியில் நடந்த மற்றொரு வேடிக்கையான நிகழ்வு - காசர்கோடு அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது!!!

Story first published: Thursday, May 16, 2019, 18:32 [IST]
Other articles published on May 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+