Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா vs இங்கிலாந்து தொடர்.. எத்தனை போட்டிகள்.. எப்படி பார்ப்பது.. யாருக்கு வாய்ப்பு?-முழு விவரம்

சென்னை: இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மிக நீண்ட கிரிக்கெட் தொடர் இன்று சென்னையில் தொடங்க உள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் இந்திய அணி இருக்கிறது. அதேபோல் இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திவிட்டு இங்கிலாந்து அணி கெத்தாக இந்தியா வந்துள்ளது.

இந்த இரண்டு வலிமையான அணிகளும் இன்று சென்னையில் டெஸ்ட் போட்டியில் மோத இருக்கிறது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் இன்று தொடங்க உள்ளது.

இன்று டெஸ்ட்

இன்று டெஸ்ட்

இரண்டு அணிகளின் பலத்தை ஒப்பிட்டு பார்த்தால், இரண்டு அணிகளுமே வலிமையான அணியாக உள்ளது. இந்திய அணியின் பேட்டிங்கில் கோலி, ரஹானே, புஜாரா, பண்ட், கில், ரோஹித் என்ற பெரும் படையே இருக்கிறது. இங்கிலாந்து அணியில் ஜோ ரூட், பட்லர், பென் ஸ்டோக்ஸ், மெயின் அலி என்று சிறப்பான வீரர்கள் இருக்கிறார்கள்.

பவுலிங்

பவுலிங்

அதேபோல் பவுலிங்கிலும் இரண்டு அணியிலும் வலிமையாக உள்ளது. இந்திய அணியில் அஸ்வின், பும்ரா, இஷாந்த் சர்மா, வாஷிங்க்டன் சுந்தர், குல்தீப் யாதவ் ஆகியோர் உள்ளனர். இங்கிலாந்து அணியில் மெயின் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், போர், ஆர்சர் ஆகியோர் உள்ளனர் .

வலிமையான அணி

வலிமையான அணி

இரண்டு அணிகளுமே வலிமையான அணியாக இருப்பதால் கண்டிப்பாக இந்த தொடர் அதிக கவனம் பெறும் தொடராக இருக்கும். இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் நடப்பதால் மைதானம் ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமாக இருக்கும்.

எங்கு நடக்கிறது

எங்கு நடக்கிறது

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் போட்டி நடக்கும் விவரங்கள்:

  • முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் இன்று நடக்கும்
  • இரண்டாவது டெஸ்ட் போட்டியும் சென்னையில் 13ம் தேதி நடக்க உள்ளது.
  • 3வது டெஸ்ட் போட்டி 24ம் தேதி பிப்ரவரி மாதம் நடக்க அஹமதாபாத்தில் உள்ளது.
  • 4வது டெஸ்ட் போட்டி 4ம் தேதி மார்ச் மாதம் அஹமதாபாத்தில் நடக்க உள்ளது.
  • டி 20 தொடர் முழுக்க மார்ச் 12 முதல் 20ம் தேதி வரை அகமதாபாத்தில் நடக்க உள்ளது. உலகத்திலேயே அதிக மக்கள் அமரும் வசதி கொண்ட கிரிக்கெட் மைதானம் ஆகும் இது.
  • புனேவில் 3 ஒருநாள் போட்டிகளும் மார்ச் மாதத்தில் இருந்து நடக்கும்.
எப்படி பார்ப்பது

எப்படி பார்ப்பது

இரண்டு அணிகளுக்கு இடையிலான இந்த கிரிக்கெட் தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பார்க்க முடியும். டெஸ்ட் போட்டிகள் 9.30 மணிக்கு தொடங்கும். இணையத்தில் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் பார்க்க முடியும்.

இந்திய அணி

இந்திய அணி

இந்த கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய வீரர்கள் விவரம்: விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மான் கில், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, பாண்ட், சாகா, பாண்டியா, கே. எல் ராகுல், பும்ரா, இஷாந்த் சர்மா, சிராஜ், ஷரத்துல் தாக்கூர், அஸ்வின், குல்தீப், சபாஷ் நதீம், ராகுல் சாகர், வாஷிங்க்டன் சுந்தர், அக்சர் பட்டேல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து அணி

இங்கிலாந்து அணி

இந்த டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி விவரம்: ஜோ ரூட், ஜோஸ் பட்லர், ரோரி பர்ன்ஸ் , டொமினிக் சிப்லி, டேனியல் லாரன்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஒயில் பாப், மெயின் அலி, ஜோப்ரா ஆர்ச்சர், ஜாக் ப்ளீச், போர்ட், ஜேம்ஸ் ஆண்டர்சன், கிறிஸ் வோக்ஸ், பென் பொக்ஸ், டொமினிக் பெஸ்.

Story first published: Friday, February 5, 2021, 17:29 [IST]
Other articles published on Feb 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+