Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரசிகர்கள் இல்லாம டி20 உலக கோப்பை தொடரா... நினைச்சு பார்க்கக்கூட முடியல

மெல்போர்ன் : டி20 உலக கோப்பை தொடரை ரசிகர்கள் இல்லாத மூடிய மைதானங்களில் நடத்துவதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆலன் பார்டர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

ரசிகர்கள் இல்லாம டி20 தொடர் நினைச்சு பார்க்கக்கூட முடியல - ஆலன் பார்டர்

டி20 உலக கோப்பை தொடரின்மூலம் பல கட்டங்களில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் அதையெல்லாம், நீக்கிவிட்டு வெறுமனே போட்டிகளை மட்டுமே நடத்துவது சரியாக இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

ரசிகர்கள், ஊழியர்கள் சூழ தொடரை நடத்த வேண்டும் அல்லது தொடரை ரத்து செய்யும் முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர் நடைபெறுமா?

தொடர் நடைபெறுமா?

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 18ல் திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் முக்கியமான தொடராக விளங்கும் இந்த தொடர் ஆஸ்திரேலியாவின் கீலாங்கில் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் சர்வதேச அளவில் குறையாமல் உள்ளதால், குறிப்பிட்ட காலத்தில் இந்த தொடர் நடைபெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.

வீரர்கள் அதிருப்தி

வீரர்கள் அதிருப்தி

இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் குறையாமல் தொடரும்நிலையில், மூடிய மைதானங்களில் இந்த தொடரை நடத்த நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில், டி20 உலக கோப்பையை மூடிய மைதானங்களில் நடத்தினால் அதன் சிறப்பு குறையும் என்று சர்வதேச அளவில் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் க்ளென் மாக்ஸ்வெல்லும் இதே கருத்தை சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை

நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை

இந்நிலையில் ரசிகர்கள் இல்லாத டி20 உலக கோப்பை தொடரை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆலன் பார்டர் கூறியுள்ளார். வீரர்கள், ரசிகர்கள், ஊழியர்கள் இல்லாத டி20 உலக கோப்பை தொடர் சாத்தியமிலலை என்றும் இந்த போட்டிகள் அனைத்து தரப்பினருக்கும் வேலைவாய்ப்புகளை வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், மூடிய மைதானங்களில் அதை நடத்துவது சரியாக இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடரை ரத்து செய்ய வேண்டும்

தொடரை ரத்து செய்ய வேண்டும்

மூடிய மைதானங்களில் நடத்தும் முடிவை நிர்வாகிகள் கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது அந்த போட்டியின் சாரத்தை அழித்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரை மூடிய மைதானங்களில் நடத்தக்கூடாது என்றும் அல்லது அந்த தொடரை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஆலன் பார்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Story first published: Tuesday, April 14, 2020, 14:03 [IST]
Other articles published on Apr 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+