Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"2000-த்தில் ஆஸ்திரேலியா மிரள வைத்தது ஆனா இப்போ அடி வாங்கி.." ஜாம்பவான் ஆலன் டொனால்ட் விமர்சனம்

சிட்னி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அடுத்த மாதம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா விளையாட உள்ளது. இந்த நிலையில், தற்போதைய ஆஸ்திரேலிய அணியிடம் முந்தைய காலத்தைப் போன்ற அச்சுறுத்தும் பலம் இல்லை என்று தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்ட் நேரடியாக விமர்சனம் செய்துள்ளார்.

ஸ்டீவ் வாஹ் மற்றும் ரிக்கி பாண்டிங் தலைமையில் மெக்ராத், ஷேன் வார்னே, பிரெட் லீ போன்ற ஜாம்பவான்களுடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியை நேரில் எதிர்கொண்ட அனுபவம் கொண்டவர் ஆலன் டொனால்ட். ஆனால், தற்போதைய ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசை மிகுந்த பின்னடைவைச் சந்தித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

Allan Donald Says Current Australia Team is not Intimidating Like Before Ahead of South Africa Test Series

சமீபத்தில் டார்வின் நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 198 ரன்களுக்கு சுருண்டதை குறிப்பிட்ட டொனால்ட், "2000-களின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா எதிரணிகளை மிரளவைக்கும் அணியாக இருந்தது. ஆனால் இப்போது அவர்களது பேட்டிங் பலவீனமடைந்துள்ளது. வங்கதேசத்திடம் வாங்கிய அடியில் இருந்தே ஆஸ்திரேலிய பேட்டிங் பிரச்சனை அப்பட்டமாகத் தெரிகிறது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆடாமல் சீக்கிரம் ஆட்டமிழப்பதால், பந்துவீச்சாளர்களுக்குப் போதிய ஓய்வு கிடைக்காமல் கூடுதல் அழுத்தம் ஏற்படுகிறது. இருப்பினும் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் அடங்கிய ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு கூட்டணி இப்போதும் உலகத்தரம் வாய்ந்தது. அதுவே தென்னாப்பிரிக்க மண்ணில் அவர்களுக்கு முக்கிய பலமாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் அக்டோபர் 9 அன்று டர்பனில் தொடங்குகிறது. பந்துவீச்சு வலுவாக இருந்தாலும், பேட்டிங் சொதப்பல் ஆஸ்திரேலியாவுக்கு தென்னாப்பிரிக்காவில் பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் அகர்கர் பதவிக்கு வேட்டு.. பிசிசிஐ பட்டியலில் 2 முன்னாள் வீரர்கள்.. புதிய தேர்வுக் குழு தலைவர்!

அஜித் அகர்கர் பதவிக்கு வேட்டு.. பிசிசிஐ பட்டியலில் 2 முன்னாள் வீரர்கள்.. புதிய தேர்வுக் குழு தலைவர்!

2026-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா தற்போது முதல் இடத்தில் இருக்கிறது. தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கு பின்னரே ஆஸ்திரேலியாவின் உண்மையான பலம் என்னவென தெரிய வரும். தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் தோல்விகளை சந்தித்தால் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா சரிவை சந்திக்கும்.

Story first published: Thursday, September 17, 2026, 11:58 [IST]
Other articles published on Sep 17, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+