காலி மைதானத்துலயாவது கிரிக்கெட் போட்டிகளை துவங்குங்கப்பா... சொல்கிறார் அலி பாச்சர்
மும்பை : கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் சில தொடர்களையாவது ரசிகர்கள் அற்ற காலி மைதானங்களில் துவங்கவேண்டும் என்று முன்னாள் தென்னாப்பிரிக்க கேப்டன் அலி பாச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் சச்சின் டெண்டுல்கர் சிறப்பான மனித நேயம் கொண்டவராகவே தொடர்ந்து செயல்படுவதாகவும் பாச்சர் கூறியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பான ஆல்-ரவுண்டர் பேட்ஸ்மேன்கள் என்றால் அது விராட் கோலி மற்றும் ஏபி டீ வில்லியர்ஸ்தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் குறித்து கருத்து
கடந்த 1991ல் தென்னாப்பிரிக்க அணி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தடைபெறுவதற்கு முன்பு அந்த அணியை சிறப்பாக வழிநடத்தியவரும், பின்பு தடையிலிருந்து மீண்டுவர உதவியவருமான அந்த அணியின் முன்னாள் கேப்டன் அலி பாச்சர், நெருக்கடியான சூழல்களில் சிறப்பாக செயல்பட்டவர். இந்நிலையில், தற்போது கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அலி பாச்சர் கருத்து
இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக முடங்கியுள்ள கிரிக்கெட் போட்டிகளை காலி மைதானங்களிலாவது நடத்துமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் இந்தியா மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள சுற்றுப்பயணம், தற்போது மிகுந்த நிதி நெருக்கடியில் உள்ள தென்னாப்பிரிக்காவிற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அதனால் வரும் ஆகஸ்டில் விமான போக்குவரத்து இருக்கும் யூஎஇ போன்ற பொதுவான இடத்திலாவது இந்த தொடரை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சச்சினுக்கு பாச்சர் புகழாரம்
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக கடந்த 2013ல் மும்பையில் நடைபெற்ற இறுதிபோட்டி டிவியில் ஒளிபரப்பப்பட்டது குறித்து தான் சச்சின் டெண்டுல்கருக்கு மெசேஜ் செய்ததாகவும், அவர் உடனடியாக தனக்கு மிக நீண்ட ரிப்ளை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். அவர் மிகசிறந்த மனிதநேயம் கொண்டவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

விராட் கோலி மிகவும் திறமையானவர்
கடந்த 10 ஆண்டுகளில் விராட் கோலி மற்றும் ஏபி டீ வில்லியர்ஸ் தான் மிகவும் சிறந்த ஆல்-ரவுண்டர் பேட்ஸ்மேன்கள் என்று தான் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் இவர்கள் குறித்து கூறும்போது தான் சச்சின் டெண்டுல்கர், ஜாக்குவஸ் காலிஸ் போன்றவர்களை இந்த பட்டியலில் சேர்க்க வில்லை என்றும் கூறியுள்ளார். கோலி மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர் பேட்ஸ்மேன் என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications