முதல்ல இதை செய்யுங்க... டீம் தானா உருப்படும்...! முன்னாள் இந்திய கோச் சொன்ன சூப்பர் ஐடியா
மும்பை: இந்திய அணி வெளிநாடுகளில் சிறப்பாக விளையாட வேண்டுமானால் பல இளம் வீரர்களை வெளிநாட்டு டி 20 தொடரில் ஆட அனுமதிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் கும்ப்ளே யோசனை தெரிவித்திருக்கிறார்.
உலக கோப்பை தொடருக்கு பிறகு, இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கலந்து கொள்கிறது. இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அணியில் யார், யார் இடம்பெறுவார்கள் என்பது தெரியவில்லை.
இந் நிலையில், இந்திய அணி முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான கும்ப்ளே இந்திய அணியின் இளம் வீரர்கள் குறித்து சில கருத்துகளை கூறியிருக்கிறார். அவர் தெரிவித்து இருப்பதாவது:

வெளிநாட்டுக்கு போக வேண்டும்
இந்திய வீரர்கள் வெளிநாடுகளில் இனி சிறப்பாக ஆட வேண்டும் என்றால் பல இளம் திறமையான வீரர்களை வெளிநாட்டு டி20 தொடரில் விளையாட அனுமதிக்க வேண்டும். மற்ற நாடுகளின் வீரர்களை போன்று இந்திய வீரர்களும் வெளிநாடுகளுக்கு சென்று கிரிக்கெட் விளையாட வேண்டும்.

சலுகை கிடையாது
மற்ற நாடுகளை போல இந்திய வீரர்களுக்கு அவ்வளவு சலுகை கிடையாது. மற்ற நாட்டு வீரர்கள் அனைத்து வகையான நாட்டிற்கும் சென்று டி20 தொடரில் விளையாடி அந்த நாட்டின் இயல்பு நிலைக்கு ஏற்றமாதிரி அனுபவத்தை பெறுகின்றனர்.

அனுபவம் அதிகரிக்கும்
ஆனால் இந்திய இளம் வீரர்கள் உள்நாட்டில் மட்டும் ஆடி இங்கு மட்டுமே சிறப்பாக ஆடுகிறார்கள். இந்திய அணியின் இளம் வீரர்கள் வெளிநாடுகளில் சென்று டி20 தொடரில் பங்கேற்று விளையாடினால் அவர்களது வெளிநாட்டு அனுபவம் அதிகரிக்கும்.

நம்பிக்கை வரும்
மேலும் வெளிநாடுகளில் இந்திய அணி தோற்பதற்கு இந்த அனுபவமின்மையே முக்கிய காரணமாக இருக்கிறது. அதனால் வெளிநாட்டு தொடர்களில் இந்திய இளம் வீரர்கள் சென்று விளையாட பிசிசிஐ அனுமதிக்க வேண்டும். வெளி நாடுகளில் சென்று இளம் வீரர்கள் ஆடும் போது அவர்களால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை வரும் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications