தோனியின் விக்கெட் கீப்பிங் ரெக்கார்டு காலி.. உலகிலேயே நம்பர் 1.. தெறிக்கவிட்ட வீராங்கனை!
சிட்னி : சர்வதேச டி20 போட்டிகளில் தோனியின் விக்கெட் கீப்பிங் சாதனையை முறியடித்து இருக்கிறார் ஆஸ்திரேலிய வீராங்கனை அலிசா ஹீலி.
உலகிலேயே அதிக சர்வதேச டி20 விக்கெட் வீழ்ச்சிகள் செய்த விக்கெட் கீப்பர் வரிசையில் தோனியை வீழ்த்தி உள்ளார் அவர்.
இந்த பட்டியலில் வேறு எந்த கிரிக்கெட் வீரரும் தோனியை தவிர முதல் ஐந்து இடங்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தோனி
சர்வதேச டி20 போட்டிகளில் சிறந்த விக்கெட் கீப்பராக வலம் வந்தார் தோனி. அவர் 98 டி20 போட்டிகளில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக ஆடி உள்ள அவர், 91 விக்கெட் வீழ்ச்சி செய்துள்ளார். இதில் 57 கேட்ச், 34 ஸ்டம்பிங் அடங்கும்.

அலிசா ஹீலி
உலகிலேயே அதிக சர்வதேச டி20 விக்கெட் வீழ்ச்சி செய்த விக்கெட் கீப்பராக வலம் வந்தார் தோனி. ஆடவர் கிரிக்கெட்டில் அவருக்கு அருகே கூட எந்த விக்கெட் கீப்பரும் இடம் பெறவில்லை. எனினும், மகளிர் கிரிக்கெட்டில் அலிசா ஹீலி தோனியை நெருங்கி வந்தார்.

விக்கெட் கீப்பிங் சாதனை
தற்போது ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையே மகளிர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டாவது டி20 போட்டியில் ஆடிய அலிசா ஹீலி தோனியின் டி20 விக்கெட் கீப்பிங் சாதனையை முறியடித்தார். உலகிலேயே நம்பர் 1 இடத்தை பிடித்தார்.

முதல் இடம்
அலிசா ஹீலி 114 டி20 போட்டிகளில் 92 விக்கெட் வீழ்ச்சி செய்துள்ளார். இதன் மூலம் ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட்டை சேர்த்து சர்வதேச டி20 போட்டிகளில் அலிசா ஹீலி அதிக விக்கெட் வீழ்ச்சி செய்த விக்கெட் கீப்பர்கள் வரிசையில் முதல் இடத்தை பிடித்தார்.

அடுத்த இடங்களில் யார்?
இந்த பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் அலிசா ஹீலி, தோனி இடம்பெற்றுள்ள நிலையில், அடுத்த இடங்களில் சாரா டெய்லர் (74 விக்கெட் வீழ்ச்சிகள்), ரேச்சல் ப்ரீஸ்ட் (72 விக்கெட் வீழ்ச்சிகள்), மெரிசா (70 விக்கெட் வீழ்ச்சிகள்) உள்ளனர்.


Click it and Unblock the Notifications