Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி..!! அமேசான் பிரைமில் இனி கிரிக்கெட் பார்க்கலாம்..!! விவரம்!!

சென்னை: ஒரு காலத்தில் கிரிக்கெட்டை வானொலி மூலம் நமது முன்னோர்கள் கேட்டனர்.

அதன் பிறகு நாம் கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சி பெட்டியில் நேரலையில் கண்டோம். கிரிக்கெட் மேட்ச்க்காக லீவ் போட்ட கடைசி தலைமுறை நாமாக தான் இருப்போம்..

ஏனென்றால் தற்போது உள்ள தலைமுறை செல்போனிலேயே கிரிக்கெட் மேட்ச்களை எங்கு வேண்டுமானாலும் காணும் வசதியை அனுபவித்து வருகின்றனர்

கிரிக்கெட் ஆப்கள்

கிரிக்கெட் ஆப்கள்

கையில் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன், நல்ல இண்டர்நெட் சேவை இருந்தால் போதும், நாம் எங்கு சென்றாலும் கிரிக்கெட் போட்டியை தவறாமல் பார்க்கலாம். தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டார், ஜியோ டிவி, சோனி போன்ற ஆப்களிலும், யூ டியூப் பக்கங்களில் கிரிக்கெட் போட்டிகள் நேரலை செய்யப்படுகிறது

போட்டியில் அமேசான்

போட்டியில் அமேசான்

தற்போது இந்த பட்டியலில் இணைந்துள்ளது உலகின் முன்னணி ஓடிடி தளமான அமேசான் வீடியோ பிரைம். வெறும் சினிமா, வெப் சீரிஸ் மட்டும் இல்லாமல் தற்போது விளையாட்டையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இனி அமேசானில் கிரிக்கெட் போட்டிகளை நேரலையில் காணலாம்

நியூசிலாந்து தொடர்

நியூசிலாந்து தொடர்

ஏற்கனவே கால்பந்து, டென்னிஸ் ஆகிய விளையாட்டு போட்டிகளின் நேரலையை வெளிநாடுகளில் வழங்கி வரும் அமேசான், தற்போது நியூசிலாந்து தொடர் மூலம் கிரிக்கெட்டையும் ஒளிபரப்பு செய்ய உள்ளது. இதற்காக நியூசிலாந்தில் நடைபெறும் அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளையும் ஒளிபரப்பு செய்ய அமேசான் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது

ஐ.பி.எல். தொடர்

ஐ.பி.எல். தொடர்

வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ள வங்கதேச தொடர், பிப்ரவரியில் நடைபெறும் தென்னாப்பிரிக்கா தொடர்,மார்சில் நடைபெறும் இந்திய மகளிர் தொடர், ஆஸ்திரேலியா தொடரை அமேசான் நிறுவனம் ஒளிபரப்ப செய்ய உள்ளது. மேலும் ஐ.பி.எல். போட்டிகளையும் ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டுள்ள அமேசான் பிரைம், அதற்கான ஏலத்தில் பங்கேற்க உள்ளது.

Story first published: Tuesday, December 21, 2021, 17:55 [IST]
Other articles published on Dec 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+