For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அம்பானி குடும்ப விஷேசத்திற்காக கிரிக்கெட் போட்டி மாற்றமா? பிசிசிஐ மீது பகீர் புகார்

IND vs ENG : இந்தியா இங்கிலாந்து அணிக்கு ஐந்தாவது டெஸ்ட் போட்டி ஒரு மார்ச் 7ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது.

இந்தத் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் சுமார் பத்து நாட்கள் ஓய்வு கொடுத்த பிறகு தான் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நடைபெற்றது. இந்த நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி மூன்று நாட்கள் இடைவெளியில் நடக்கும் வகையில் அட்டவணை அறிவிக்கப்பட்டிருந்தது.

Ambani son Marriage function - did ind vs Eng 5th test match was scheduled to accommodate cricketers

ஆனால் நான்காவது டெஸ்ட்க்கும் ஐந்தாவது டெஸ்ட்க்கும் மீண்டும் ஒரு எட்டு நாட்கள் பிசிசிஐ ஓய்வு வழங்க இருக்கிறது. பிசிசிஐ இந்த மாதிரி வீரர்களுக்கு அட்டவணையில் ஓய்வு வழங்கியதே கிடையாது. இருக்கும் நாட்களை பயன்படுத்தி எவ்வளவு போட்டியை நடத்தலாம் என்பதில் தான் பிசிசிஐ குறியாக இருக்கும்.

ஆனால் ஒரே தொடரில் இரண்டு முறை ஓய்வு கொடுத்து கிரிக்கெட் போட்டிகளை பிசிசிஐ நடத்தியது ரசிகர்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தான் பிசிசிஐ இந்த செயலுக்கு பின் இப்படி ஒரு காரணம் இருக்குமோ என்று ரசிகர்கள் சந்தேகம் வந்துள்ளது.

அதாவது இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் காஷ்மீரில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக உலகின் ஒட்டுமொட்டு நட்சத்திரங்களும் காஷ்மீரில் குவிந்துள்ளனர். இந்தியாவின் ஒட்டுமொத்த பாலிவுட் திரை உலகை அம்பானி வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறது.

இந்த நிலையில் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்த நிகழ்ச்சிக்கு சென்று இருக்கிறார்கள். இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்டவர்களும் காஷ்மீர் சென்று நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்கிறார்கள். இதனை சுட்டிக்காட்டி உள்ள ரசிகர்கள் அம்பானி குடும்ப நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க வேண்டும் என்பதற்காக பிசிசிஐயே இவ்வாறு அட்டவணையில் ஓய்வு வழங்கியிருக்கிறதா என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

காஷ்மீரில் அம்பானி குடும்ப நிகழ்ச்சிக்காக அங்கு உள்ள விமான நிலையத்திற்கு பத்து நாட்களுக்கு சர்வதேச அந்தஸ்து வழங்கி பல உதவிகளை மத்திய அரசு செய்து வரும் நிலையில் அம்பானி குடும்பத்திற்காக கிரிக்கெட் போட்டிகளும் தள்ளி வைக்கப்பட்டு இருக்கலாம் என்று ரசிகர்கள் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். எனினும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு இதுபோல் இரண்டு முறை ஓய்வு வழங்குவது நடைமுறையில் இருக்கும் ஒரு விஷயம் தான்.

இங்கிலாந்து இதுபோன்ற ஐந்து டெஸ்ட்கள் விளையாடும் போதெல்லாம் இப்படி ஓய்வு வழங்கப்பட்டு இருக்கிறது என்று மற்றொரு தரப்பினர் சுட்டிக் காட்டியுள்ளனர். மேலும் கிரிக்கெட் வீரர்களும் பங்கேற்க வேண்டும் என்பதற்காக தான் அம்பானி இந்த காலகட்டத்தில் நிகழ்ச்சியை வைத்திருக்கிறார் என்றும் திருமணம் ஜூலை மாதத்தில் டி20 உலக கோப்பை முடிவடைந்த பிறகு வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Story first published: Sunday, March 3, 2024, 6:51 [IST]
Other articles published on Mar 3, 2024
English summary
Ambani son Marriage function - did ind vs Eng 5th test match was scheduled to accommodate cricketers அம்பானி குடும்ப விஷேசத்திற்காக கிரிக்கெட் போட்டி மாற்றமா? பிசிசிஐ மீது பகிர் புகார்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+