Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அம்பத்தி ராயுடு - ஷெல்டன் ஜாக்சன் ஆக்ரோஷ சண்டை.. கையில் பேட் வேற.. சையது முஷ்டக்அலி தொடரில் பரபரப்பு

இந்தூர்: அம்பத்தி ராயுடு மற்றும் ஷெல்டன் ஜாக்சன் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டதால் சையது முஷ்டக் அலி கோப்பையில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியாவின் மிக பிரபலமான உள்நாட்டு தொடரான சையது முஷ்டாக் அலி கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் இன்றைய போட்டியில் பரோடா மற்றும் சௌராஷ்டிரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின

லீக் சுற்று

லீக் சுற்று

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தான் பரபரப்பு சண்டை நடந்தது. சௌராஷ்டிரா அணி இன்னிங்ஸின் 9வது ஓவரில் ஷெல்டன் ஜாக்சன் களத்தில் இருந்தார். இந்திய அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு பரோடா அணிக்காக ஃபீல்டிங் செய்துக்கொண்டிருந்தார். அப்போது ஜாக்சனின் உடற்மொழி மற்றும் செயல்பாடுகள் ராயுடுவை சீண்டியுள்ளன.

என்ன காரணம்

என்ன காரணம்

வேண்டுமென்றே பந்தை எதிர்கொள்வதற்காக ஷெல்டன் ஜாக்சன் நீண்ட நேரம் எடுத்துக்கொண்டதால் போட்டியும் தாமதித்துக்கொண்டே சென்றதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அம்பத்தி ராயுடு நேராக ஷெல்டனிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கு ஷெல்டனும் பதிலடி கொடுக்க தவறவில்லை.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இருவரும் ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக சென்று வாக்குவாதம் செய்தனர். கையில் பேட்டையும் வைத்திருந்ததால் பதறிப்போன சக வீரர்களும், கள நடுவர்களும் உடனடியாக சென்று இருவரையும் பிரித்தனர். பின்னர் சமாதானப்படுத்தி போட்டி நடத்தப்பட்டது. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

வென்றது யார்?

வென்றது யார்?

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பரோடா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 175 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய சௌராஷ்டிரா அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 178 ரன்களை விளாசி வெற்றி பெற்றது. இதில் அம்பத்தி ராயுடு டக் அவுட்டும், ஷெல்டன் ஜாக்சன் 17 ரன்களும் விளாசியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, October 12, 2022, 18:54 [IST]
Other articles published on Oct 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+