Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிளே ஆஃப் போகப் போகும் 4 அணிகள் இவைதான்.. அம்பத்தி ராயுடு போட்ட போடு.. டெல்லி கேப்பிடல்ஸ்-க்கு கல்தா

மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் இதுவரை 42 லீக் போட்டிகள் முடிந்துள்ளன. இந்த நிலையில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப்போகும் நான்கு அணிகள் எவை என்பது குறித்து நேரலை விவாதத்தின் போது முன்னாள் வீரர்கள் அடங்கிய குழுவினர் விவாதித்தனர். அப்போது முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு, அனைவருக்கும் வியப்பளிக்கும் வகையில், டெல்லி கேபிடல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாது எனக் கணித்திருந்தார்.

அம்பத்தி ராயுடு தனது கணிப்பின்படி, குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய நான்கு அணிகள்தான் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் எனக் கணித்து உள்ளார். டெல்லி கேப்பிடல்ஸ் அணி தான் ஆடிய 8 போட்டிகளில் ஆறு வெற்றிகளை பெற்றுள்ள நிலையில் அந்த அணிக்கு இடம் அளிக்கவில்லை.

IPL 2025 IPL Points table Ambati Rayudu Anil Kumble IPL

ஆனால் மற்றவர்களோ, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அல்லது மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டு அணிகளில் ஒரு அணிதான் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என கணித்துள்ளனர். முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே வெளியிட்டுள்ள கணிப்பில், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் நான்காவது இடத்திற்கு பஞ்சாப் கிங்ஸ் அல்லது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய இரண்டில் ஒரு அணி முன்னேறும் எனக் கணித்து உள்ளார்.

முன்னாள் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் இது குறித்து தனது கணிப்பில், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய நான்கு அணிகள் முன்னேறும் எனக் கணித்து உள்ளார்.

மார்க் பவுச்சர் கூறுகையில், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்றார்.

முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் வெளியிட்ட கணிப்பில், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய நான்கு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்றார்.

Story first published: Friday, April 25, 2025, 12:56 [IST]
Other articles published on Apr 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+