Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜிம்பாப்வே டூரில் அசத்தலாக ஆடிய அம்பட்டி ராயுடு காயத்தால் அவுட்.. சஞ்சு சாம்சனுக்கு சான்ஸ்!

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி நாளை நடைபெறுகிறது.

இந்நிலையில் முதல் போட்டியில் சதம் அடித்து இந்தியாவை இக்கட்டான நிலையில் இருந்து மீட்டெடுத்த அம்பட்டி ராயுடு காயமடைந்துள்ளார். நேற்று நடைபெற்ற 2வது போட்டியின்போது அவரது வலது கால் தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இது குணம் அடைய இரண்டு முதல் மூன்று வாரங்கள் தேவை.

Ambati Rayudu out of Zimbabwe tour; Sanju Samson called up

எனவே, ஜிம்பாப்வே தொடரில் இருந்து அம்பட்டி ராயுடு நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் ஐ.பி.எல். அணிக்காக விளையாடிய சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.

Ambati Rayudu out of Zimbabwe tour; Sanju Samson called up

இந்தியா- ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் வரும் 17ம் தேதி தொடங்குகிறது. அதிலும் ராயுடு ஆட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, சஞ்சு சாம்சன், தனக்கு கிடைத்துள்ள வாய்ப்பு பற்றி மகிழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளார்.

Story first published: Monday, July 13, 2015, 16:21 [IST]
Other articles published on Jul 13, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+