Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒன்டே மட்டும் போதும்.. இருப்பதை வச்சு சந்தோசமா இருப்போம்.. அம்பதி ராயுடு புது முடிவு

ஹைதராபாத்: இந்திய ஒருநாள் போட்டிகள் அணிக்குள் நீண்ட காலம் கழித்து நுழைந்துள்ள அம்பதி ராயுடு, முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அம்பதி ராயுடு ஹைதராபாத் அணியின் கேப்டன் பதவியில் நீண்ட காலம் பதவி வகித்தார். அந்த மாநில ரஞ்சி அணிக்கும் கேப்டனாக இருந்து வந்தார்.

ஒருநாள் போட்டிகள் இந்திய அணியின் அவர் ஆடி வருவதால், இனி நீண்ட நாள் போட்டிகளில் பங்கு பெறுவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார் ராயுடு.

[என் மனதை சோர்ந்து போகச் செய்தார்கள்.. ஓய்வு முடிவுக்கு தூண்டினார்கள் - சர்தார் சிங்]

இடத்தை பிடித்தார் ராயுடு

இடத்தை பிடித்தார் ராயுடு

இந்திய ஒருநாள் போட்டிகள் அணியில் 4வது இடத்தில் பேட்டிங் செய்ய சரியான வீரர் இல்லாத நிலை நீடித்தது. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அம்பதி ராயுடு சிறப்பாக ஆடி ரன் குவித்தார். ஒரு சதம், ஒரு அரைசதம் அடித்த ராயுடு தொடரில் 217 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், இந்திய அணியில் தன் இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.

முதல் தர போட்டிகளில் ஓய்வு முடிவு

முதல் தர போட்டிகளில் ஓய்வு முடிவு

இதை அடுத்து, இனிமேல் இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் ஆடுவதிலும், இடம் பெறுவதிலும் கவனம் செலுத்தும் வகையில் நான்கு நாள் போட்டிகளான முதல் தர போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளார் அம்பதி ராயுடு. அதே சமயம், அம்பதி ராயுடு சர்வதேச மற்றும் உள்ளூர் குறைந்த ஓவர் போட்டிகளில் பங்கேற்பார் என தெரிவித்துள்ளார் ராயுடு. இந்திய டெஸ்ட் அணியில் இதுவரை அம்பதி ராயுடு இடம் பெற்றதில்லை. அதனால், இனியும் டெஸ்ட் போட்டிகளில் இடம் பெற வாய்ப்பு குறைவு என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார்.

அம்பதி ராயுடு செயல்பாடுகள்

அம்பதி ராயுடு செயல்பாடுகள்

அம்பதி ராயுடு சுமார் 17 வருடங்களாக முதல் தர போட்டிகளில் ஆடியுள்ளார். 97 போட்டிகளில் 6151 ரன்கள் குவித்துள்ள அவர், 16 சதம் அடித்துள்ளார். மேலும், சராசரி 45.56 ஆகும். இந்திய ஒருநாள் அணிக்காக இதுவரை 45 போட்டிகளில் ஆடியுள்ளார் ராயுடு. இதில் 1447 ரன்கள் அடித்து, சராசரி 51.67 வைத்துள்ளார் ராயுடு.

வாய்ப்பு அளித்த ஐபிஎல்

வாய்ப்பு அளித்த ஐபிஎல்

முன்னதாக அம்பதி ராயுடு நீண்ட காலமாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக ஆடிய ராயுடு, அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக ஆடினார். அதையடுத்து இந்திய அணியில் இடம் பிடித்தார் அம்பதி ராயுடு.

Story first published: Friday, April 17, 2020, 21:16 [IST]
Other articles published on Apr 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+